Posts
கம்பன் புதிய பார்வை
புத்தக வாசிப்புத் தொடர் - (மார்ச் வாசிப்பு மாரத்தான்) வாசகரின் பெயர்: லதா குமார்
வாசகரின் ஊர்/ மாநிலம்: நோவாய்,மிச்சிகன் (Novi MI)
புத்தகத்தின் பெயர்: கம்பன் புதிய பார்வை
எழுத்தாளர்: அ.ச.ஞானசம்பந்தன்
பக்கங்கள்: 409
கம்பராமாயணம் பற்றிய பக்திசார்ந்த மரபான பார்வையை மாற்றி அதை சமூகவியல், உளவியல் ஒழுக்கவியல் கோணத்தில் அணுகிய நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
1985 ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது.
இந்நூல் …
கம்பனுக்கு மூலம் யார்? கம்பனுக்கு முன் பக்தி இயக்கம் கம்பனின் அரிமா நோக்கு கம்பன் கண்ட நாடு கம்பன் கண்ட மன்னன் கடவுள் மனிதனாகப் பிறந்தால் கம்பன் கண்ட பரம்பொருள் கவிக்கு நாயகர் கம்பன் கண்ட விழுப்பொருள்
read more
Posts
கவிதை
கவிதை Vinoth
கடைசி பேன்ஞ் முதல் பென்ஞ் என்பதை கூட தீன்டாமையாய் கருதும் நான் அமர எல்லா பென்ஞ் நண்பரும் காத்திருப்பர்.
எப்போதும் நேரம் தவராமல் லேட்டாய் வரும் நான் அமர தோழர்கள் மட்டும் அல்ல தோழிகளும் இடம் தருவதுன்டு. ஆண்பென் இருவருக்கும் பிடித்த புலிப்பு மிட்டாய் பேச்சுக்கு காத்திருக்கும் ஒரு கூட்டம்.
நான் உரங்கா அரைகள் இல்லை, ஞயிரு மட்டும் போன் பேசும் அப்பா காத்திருந்தால் 3 ரூபாய் செலவாகும் என்பதால் வாச்மேன் உடன் உரையாடலுடன் 5 மனிக்கு வாரத்தை துவங்கும் நான், பேசாத நண்பனின் தந்தைகள் இல்லை, தட்டாத கதவுகள் இல்லை.
புகை பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்படதால் மைதானத்தில் இயர்க்கையுன் இல்லாமல் குளியல் அரையில் தம் அடித்கும் புரட்சிப்படையின் தளபதி நான் செல்லாத இடம் என்றும் எதுவும் இல்லை கல்லூரி விடுதியில்
read more
Posts
கழல்கள் சந்திப்பு
கழல்கள் சந்திப்பு இன்று திருமதி மது அவர்களின் அறிமுகத்துடன் உரையாடல் துவங்கியது. அவரின் அனுபவம் மற்றும் தமிழ் பற்று எங்களை மிரள்ச்சி அடைய செய்தாலும். அவரின் கனிவான சொல்லாடல் மிகவும் உற்சாகம் தருவதாய் இருந்தது.
நம்மில் சிலர் கதை கேட்க பேரவா கொண்டிருப்பதை போல் அவர் கதை படைப்பது மற்றும் சொல்வதில் அனுபவம் மிக்கவர். அவரை குழுவில் இணைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். 🙏🙏🙏
பின் திரு சன்முகம் அவர்களின் வவ முன் எடுப்பை பற்றிய சிரிய உரை மற்றும் அவரின் கவிதை (இங்கு பதிவில் உள்ளது).
வவ வட்டார வழக்குகளை குரல் (ஒலி) வடிவில் தொகுக்கும் முயற்சி. மேலும் விவரங்களை தனியாக பின் ஒரு நாள் இணைக்கிறேன்.
read more
Posts
கழல்கள் சந்திப்பு – இளமை நினைவுகள்
கழல்கள் சந்திப்பு – இளமை நினைவுகள் 7/15/23
Shan: இன்றைய சந்திப்பு அருமை மற்றும் இனிமை.. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி♥️🙏🙏🙏
Vinoth: எதைப்பற்றி உரையாடுவது என்னும் குழப்பதில் துவங்கி நேரம் போதவில்லை என்ற ஏக்கத்தில் முடிந்த இந்த சந்திப்பு.
கழல்கள் குழுவை உருவாக்கியதின் குறிக்கோளை பறைசாற்றும் வண்ணம் இருந்தது மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏
RAMCHANDAR M: நினைவலைகளில் நீந்தச்செய்துவிட்டது.. நண்பர்களின் அனுபவப்பகிர்வுகள்
Shan: இன்றைய உரையாடலில் கீரிப்பிள்ளையையும் பற்றி கலந்துரையாடினோம். லதா டீச்சர் பாம்பு கீரிக் கதை சிலப்பதிகாரத்தில் வருது என்று மேலதிக தகவலை பகிர்ந்தார்கள்.. ♥️♥️
Shan: நமது சேர இளவல் இளங்கோ கீரி பிள்ளையை “பிள்ளை நகுலம்” என்று மிக அழகாக குறிப்பிடுகின்றார்👌
read more
Posts
கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்
கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!! இன்றைய சிந்தனை Raj Uncle
பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.
குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல.
எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது.
read more
Posts
சிலம்பு முதல் ஆண்டு விழா
சிலம்பு முதல் ஆண்டு விழா Shan
வணக்கம்!. நம் சிலம்பு பள்ளி மனதை மயக்கும் மழலை போன்று அழகாய் தவழ்ந்து , நிமிர்ந்து, நடந்து தனது முதல் ஆண்டு விழாவையும் மற்றும் முதல் பட்டமளிப்பு விழாவையும் இனிதே கொண்டாடி மகிழ்ந்தது. நம் குழந்தை செல்வங்களும் மகிழ்ச்சியுடன் தங்களது தமிழ் வகுப்புகளை நிறைவு செய்துள்ளார்கள். அவர்களுடைய கோடை விடுமுறையை பயனுள்ளதாக இருக்க நம் “சிலம்பின் கழல்கள்”மூலம் குறுகிய கால கோடை கால தமிழ் சிறப்பு வகுப்புகளை நிகழ் நிலை மூலம் நடத்தலாம். அது அவர்களுடைய தமிழ் கற்றலை தொடரச் செய்து மென்மேலும் சிறக்க உதவிடும்.
உதாரணமாக:- திருக்குறள் ( குறளும் விளக்கமும் கதைகளுடன்) தமிழ் சொற்கள் வினாடி வினா தமிழ் கையெழுத்துப் பயிற்சி மேலும் நம்முடைய அணியின் அனைவரது கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றது.
read more
Posts
சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?
புத்தக வாசிப்புத் தொடர் - (மார்ச் வாசிப்பு மாரத்தான்) வாசகரின் பெயர்: லதா குமார்
வாசகரின் ஊர்/ மாநிலம்: நோவாய்,மிச்சிகன் (Novi MI)
புத்தகத்தின் பெயர்: சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?
எழுத்தாளர்: சிவசங்கரி
பக்கங்கள்: 181
திருமதி சிவசங்கரி அவர்கள் எழுதிய கட்டுரைகளில் இது எனக்கு மிகவும் பிடித்தது. சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?
குறைகளை மட்டுமே நம்பி நம் நிறைகளை காணத் தவறிய உள்ளங்களுக்கு …
சத்தியமாய் வெளிச்சமும், இருளும், காற்றும், புழுக்கமும்; தைரியமும், கோழைத்தனமும்; தன்னம்பிக்கையும், மனச்சோர்வும்; நிம்மதியும், உளைச்சலும் நமக்குள்ளேதான் இருக்கின்றன.
இதை உணராமல், உணர முடியாமல், கோபமும், தாபமும், வேதனையும், வலியும், ஆங்காரமும, ஆற்றாமையும், அறிவீனமும், பலவீனமும் துவக்கத்தில் சன்னமான நூல் இழைகளாய் நம்மை பின்னி பிணைக்கவும், பிற்பாடு அவையே நம்மை மண்ணோடு மண்ணாய் புதைக்கும் வலிமை பெற்ற கனமான இரும்பு சங்கிலிகளாய் மாறவும் இடம் கொடுத்தால், நஷ்டம் யாருக்கு?
read more
Posts
தமிழ் எனும் அமுது
தமிழ் எனும் அமுது Latha Kumar
காய்கறிக்கடை ஒன்றில்….
“கிள்ளிப் பார்க்காதீர் கிழங்கை” என்றாள்..!
“அப்படியொன்றும்
வயதாகி விடவில்லை..
என் கை இளங்கைதான்” என்றேன்..
அவள் முறைப்புக்கு இடையே
“என்ன இது, கொத்து மல்லி வாசமே இல்லை?” என்றேன்…
“ம்…இது காலை நேரம்
அதனால் பூக்க வில்லை "
எனச் சிரித்தாள்.
ஆனால் அந்தச் சிரிப்பில்
அதிகாலையிலே அழகாய்
மல்லி பூத்திருந்தது.
சித்தம் சூடேற்றும் அவள்
கண்களைப் பார்த்துக் கொண்டே…
“முத்தம் தரும் காய் உண்டோ…?”
என்றேன்…
“என்ன என்ன” என்று அதட்டினாள்…
“முத்துக்கள் ஒளிந்திருக்கும்
வெண்டைக் காயைச் சொன்னேன்”
என்றேன்…
“வெண்டையில்லை
வெட்டும் காயிருக்கிறது
வேண்டுமா? " என்றாள்.
read more