கம்பன் புதிய பார்வை
புத்தக வாசிப்புத் தொடர் - (மார்ச் வாசிப்பு மாரத்தான்)
வாசகரின் பெயர்: லதா குமார்
வாசகரின் ஊர்/ மாநிலம்: நோவாய்,மிச்சிகன் (Novi MI)
புத்தகத்தின் பெயர்: கம்பன் புதிய பார்வை
எழுத்தாளர்: அ.ச.ஞானசம்பந்தன்
பக்கங்கள்: 409
கம்பராமாயணம் பற்றிய பக்திசார்ந்த மரபான பார்வையை மாற்றி அதை சமூகவியல், உளவியல் ஒழுக்கவியல் கோணத்தில் அணுகிய நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
-
1985 ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது.
-
இந்நூல் …
கம்பனுக்கு மூலம் யார்? கம்பனுக்கு முன் பக்தி இயக்கம் கம்பனின் அரிமா நோக்கு கம்பன் கண்ட நாடு கம்பன் கண்ட மன்னன் கடவுள் மனிதனாகப் பிறந்தால் கம்பன் கண்ட பரம்பொருள் கவிக்கு நாயகர் கம்பன் கண்ட விழுப்பொருள்
என பத்து துணைத் தலைப்புகளில் கம்பனின் வரலாற்றுப் பின்புலம் மற்றும் கம்பனின் விழுமியங்கள் ஆகியவற்றை ஆராய்கிறது.
-
கம்பன் இந்துமதம் சார்ந்த பார்வையை, பக்தியை முன்வைப்பவர் என்றும் வடவர் கருத்தை முன்வைப்பவர் என்றும் சொல்லப்பட்டு வந்த சூழலில், கம்பன் உலகு தழுவிய மானுட அறத்தை முன்வைக்கும் பெருங்கவிஞர் என வாதிடுகிறது. .
-
கம்பன் பேசுபவை நல்லாட்சி, நல்ல நாடு எனும் அடிப்படை விழுமியங்களையே என விளக்கும் இந்நூல் ஒரு புது பார்வையை அளிக்கும்.
லதா குமார். 3/27/2023 மீண்டும் ஒரு நூல் அறிமுகத்தோடு சந்திப்போம்…