சிலம்பு முதல் ஆண்டு விழா
சிலம்பு முதல் ஆண்டு விழா
Shan
வணக்கம்!. நம் சிலம்பு பள்ளி மனதை மயக்கும் மழலை போன்று அழகாய் தவழ்ந்து , நிமிர்ந்து, நடந்து தனது முதல் ஆண்டு விழாவையும் மற்றும் முதல் பட்டமளிப்பு விழாவையும் இனிதே கொண்டாடி மகிழ்ந்தது. நம் குழந்தை செல்வங்களும் மகிழ்ச்சியுடன் தங்களது தமிழ் வகுப்புகளை நிறைவு செய்துள்ளார்கள். அவர்களுடைய கோடை விடுமுறையை பயனுள்ளதாக இருக்க நம் “சிலம்பின் கழல்கள்”மூலம் குறுகிய கால கோடை கால தமிழ் சிறப்பு வகுப்புகளை நிகழ் நிலை மூலம் நடத்தலாம். அது அவர்களுடைய தமிழ் கற்றலை தொடரச் செய்து மென்மேலும் சிறக்க உதவிடும்.
உதாரணமாக:-
- திருக்குறள் ( குறளும் விளக்கமும் கதைகளுடன்)
- தமிழ் சொற்கள் வினாடி வினா
- தமிழ் கையெழுத்துப் பயிற்சி
மேலும் நம்முடைய அணியின் அனைவரது கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றது..
விழையாட்டுக்கள்
நாம அந்த விளையாட்டுக்களை( tennis , football ) எவ்வளவு தூரம் திறம்பட நடத்த முடியும்னு தெரியல !?. மேலும் அதுக்கு பயிற்சியாளர்கள் , மைதானம் மற்றும் மேலதிக உபகரணங்கள் எல்லாம் வேணும்.
நான் யோசிப்பது அல்லது என் கருத்து. உபகரணங்கள் இல்லாத விளையாட்டு.. தொட்டு விளையாடும் முறை(tag game) .
உதாரணங்கள்
- கோ-கோ
- ஒரு பந்தை மையத்தில் வைத்து ஒரு குழு பாதுகாக்க வேண்டும் மற்றொரு குழு எடுக்க முயலுதல்
- கண் கட்டி தொடுதல்( அணியினர் வழி நடத்தி)
- இது போன்று நாம் சிறுவயதில் விளையாண்ட விளையாட்டுக்களை கொஞ்சம் மேம்படுத்தி திறம்பட நடத்தலாம்
பயன்கள்:-
- குழந்தைகள் ஓடி விளையாடும்
- குழு உணர்வுக்காண் புரிதல் ஏற்ப்படும்
- வெற்றி தோல்வி என்ற மன நிலை தாண்டி. மகிழ்ச்சியுடன் உடல் உறுதியை உறுதி செய்யும். அனைவரும் இணைந்து விளையாடும் தன்மை அதிகரிக்கும்
- கருவிகள் இல்லாமலே விளையடலாம் என்கிற எண்ணம் மேம்படும்
சவால்கள்:
- பெற்றோர்களின் ஆர்வம்
- குழந்தைகளுக்கு விளையாட்டின் தன்மையை புரிய வைத்தல்
- விளையாட்டை இந்த புவியியல் தன்மைக்கு ஏற்ப வடிவமைத்தல்
Latha Kumar: பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்யலாம் என்று சொல்கிறார். சிறப்பு. 👌👍