சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?
புத்தக வாசிப்புத் தொடர் - (மார்ச் வாசிப்பு மாரத்தான்)
வாசகரின் பெயர்: லதா குமார்
வாசகரின் ஊர்/ மாநிலம்: நோவாய்,மிச்சிகன் (Novi MI)
புத்தகத்தின் பெயர்: சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?
எழுத்தாளர்: சிவசங்கரி
பக்கங்கள்: 181
- திருமதி சிவசங்கரி அவர்கள் எழுதிய கட்டுரைகளில் இது எனக்கு மிகவும் பிடித்தது.
சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?
குறைகளை மட்டுமே நம்பி நம் நிறைகளை காணத் தவறிய உள்ளங்களுக்கு …
சத்தியமாய் வெளிச்சமும், இருளும், காற்றும், புழுக்கமும்; தைரியமும், கோழைத்தனமும்; தன்னம்பிக்கையும், மனச்சோர்வும்; நிம்மதியும், உளைச்சலும் நமக்குள்ளேதான் இருக்கின்றன.
இதை உணராமல், உணர முடியாமல், கோபமும், தாபமும், வேதனையும், வலியும், ஆங்காரமும, ஆற்றாமையும், அறிவீனமும், பலவீனமும் துவக்கத்தில் சன்னமான நூல் இழைகளாய் நம்மை பின்னி பிணைக்கவும், பிற்பாடு அவையே நம்மை மண்ணோடு மண்ணாய் புதைக்கும் வலிமை பெற்ற கனமான இரும்பு சங்கிலிகளாய் மாறவும் இடம் கொடுத்தால், நஷ்டம் யாருக்கு? வேதனை யாருக்கு? தேக்கம் யாருக்கு?
சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? என்ற இந்த நூலின் மூலம் …
துணிந்து விட்டால், எல்லாமே நூல் இழைகள்தான்….
கணப்பொழுதில் அவற்றை அறுத்துக் கொண்டு வெளியேறி, உயரே உயரே பறப்பது சாத்தியமே.
மத்தியதர மக்களின் அன்றாட வாழ்வியலுக்கு வேண்டிய அத்தனை அறிவுரைக ளும், கருத்துக்களும் அள்ளித் தரும் இந்தப் புத்தகத்தை நீங்களும் படித்து மகிழ…
லதா குமார். 3/27/2023 மீண்டும் ஒரு நூல் அறிமுகத்தோடு சந்திப்போம்…