தமிழ் எனும் அமுது
தமிழ் எனும் அமுது
Latha Kumar
காய்கறிக்கடை ஒன்றில்….
“கிள்ளிப் பார்க்காதீர் கிழங்கை” என்றாள்..!
“அப்படியொன்றும்
வயதாகி விடவில்லை..
என் கை இளங்கைதான்” என்றேன்..
அவள் முறைப்புக்கு இடையே
“என்ன இது, கொத்து மல்லி வாசமே இல்லை?” என்றேன்…
“ம்…இது காலை நேரம்
அதனால் பூக்க வில்லை "
எனச் சிரித்தாள்.
ஆனால் அந்தச் சிரிப்பில்
அதிகாலையிலே அழகாய்
மல்லி பூத்திருந்தது.
சித்தம் சூடேற்றும் அவள்
கண்களைப் பார்த்துக் கொண்டே…
“முத்தம் தரும் காய் உண்டோ…?”
என்றேன்…
“என்ன என்ன” என்று அதட்டினாள்…
“முத்துக்கள் ஒளிந்திருக்கும்
வெண்டைக் காயைச் சொன்னேன்”
என்றேன்…
“வெண்டையில்லை
வெட்டும் காயிருக்கிறது
வேண்டுமா? " என்றாள்.
“ஐயய்யோ அப்படியென்ன காய்?” என்றேன்.
“கத்தரிக்காய்” என்றாள்.
“மழைபொழியும் காயுண்டோ?”
என்று மடக்கினேன்.
“புரியவில்லை” என்றாள்.
“காரம் (கார் அம்) பொழியும் காய்” என்றேன்.
“ஓ.. அடையெடுத்த பெயரோடு
அதைத் தடுக்கும் காயாக வந்துள்ளது” என்றாள்.
இப்போது நான் விழித்தேன்.
“ஆமாம், குடை மிளகாய்” என்றாள்.
“இப்படித்தான் போனவாரம்
தித்திக்கப் பேசித் தேன்காய் என்று தேங்காய் விற்றாய். வீட்டில் சென்று உடைத்துப் பார்த்தேன், ஒரே வழுக்கை” என்றேன்..
“இல்லை இல்லை குடுமியோடுதான் தந்தேன்
பொய்சொல்லாதீர்” என்றாள்.
“ஆசையொடு ஆயிரங்காய் தின்றாலும் மூக்கின் கீழ் மீசை வைத்த காயுண்டே, விலையென்ன?” என்றேன்.
சிறிதுநேர யோசனைக்குப்பின்
சிறு காயப் படுத்தும் சிரிப்போடு…
“வெங்காயமா…? விலை நூறு” என்றாள்.
விலையைக் கேட்டுப் பெருங்காயப் பட்டுப்போனேன்.
“உன் உள்ளக்காய் போலும்
உள்ளே ஒளித்துவைக்கும்..
அந்தக் காய் கிடைக்குமோ?” என்றேன்.
“அட, கள்ளக்காயைக் (கடலைக்காய்) கேட்டேன்” என்றேன்.
“அதான..” எனச் சிரித்தாள்.
“இனிக்கும் காயேதும்
உண்டா?” என்றேன்.
“சுண்டைக்காயும், பாகற்காயும் உள்ளது” என்றாள்.
“ஆமாமாம், நீ கையோடு அள்ளித் தந்தால் இனிக்காமல் என்ன செய்யும்?” என்றேன்.
“தக்காளி என்ன உன்னைப் போலவே அரைவெட்டாக இருக்கிறதே?” என்றேன்.
கண்கள் சிவக்க அவள்
காளியாவதைக் கவனித்தேன்.
“சண்டையை முடித்துக் கொள்வோம், காயா பழமா?” என்றேன்.
“பழம்” என்றாள்.
நான் கொஞ்சம் கொஞ்சமாகக்
கனிந்து கொண்டிருந்தேன்…
- அழகான சிலேடை நயம் பொருந்திய இந்த உரையாடலை எழுதியவர் யாரெனத் தெரியவில்லை. 🍁🪷👏🍁🪷👏🍁🪷👏 தி.ஜானகிராமன், (1921/1982) தஞ்சைத் தரணியின் மைந்தன் . புதின எழுத்தாளர் , ஒலிபரப்பாளர், சாகித்திய விருதாளர்.
அத்தகைய பல புதினங்கள், சிறுகதைகள் பலப்பல படைத்தவர் ! அவற்றுள் மிகப் பரவலாக விமரிசக் கப்பட்டவை மூன்று புதினங்கள் !
- அம்மா வந்தாள்,
- மோகமுள் (இது திரைப்படமாகவும் வந்தது)
- மரப்பசு
இந்த மூன்று புதினங்களிலும் மிகவும் போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் இலக்கான புதினம் " #அம்மா_வந்தாள் "
அந்த அம்மா வந்தாள் புதினத்தின் கதைச் சுருக்கத்தை . உங்கள் பார்வைக்குத் தருகிறேன் !
அம்மா வந்தாள் (Amma Vandhaal) என்கிற தமிழ்ப் புதினம் தி.ஜானகிராமன் (தி.ஜா.) அவர்களால் எழுதப்பெற்று ஐம்பத்தாறு (57) ஆண்டுகளுக்கு முன்னால் 1966ல் வெளிவந்த ஒரு இலக்கியப் படைப்பாகும்.
இந்தப் புதினம் அவர் எழுதிய புதினங்களுள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இப்புதினம், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, புகழ் பெற்ற “இல்லுஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா ( Illustrated Weekly of India) எனும் ஆங்கில வார இதழில் வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது !
அம்மா வந்தாள் கதைச் சுருக்கம் :
சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பு வேதம் படிப்பதற்காக வெளியூரில் உள்ள மடத்திற்கு அனுப்பபடுகிறான்.
அங்கே பதினாறு ஆண்டுகள் வேதம் படித்தபின்னர் தன்னுடைய சொந்த ஊருக்குப் புறப்படத்தயாராகிறான்.
இன்னும் சில நாட்களில் கிளம்ப வேண்டும் என்ற நிலையில், அம்மடத்தினை நிர்வகிக்கும் பவானியம்மாளின் தம்பி மகள் “இந்து”…… தான் அப்புவை விரும்புவதாகக் கூறுகிறாள்.
இந்து ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவள். தன் அத்தை பவானியம்மாளோடு வசிக்கிறாள். அவள் சிறுவயதிலிருந்தே அப்புவுடன் வளர்ந்தவள். அதனால் அவளுக்கு அப்புவின் மீது தீராக்காதல்.
தான் ஏற்கனவே மணமாகியவளாய் இருந்தாலும் அனைத்து நாட்களிலும் அப்புவையே நினைத்துக்கொண்டிருந்ததாக கூறுகிறாள்.
ஆனால் ஏற்கனவே திருமணமாகி விதவையானவளை மணப்பது பாவம்,அது பவானியம்மாவுக்கும், தன்னை நம்பி அனுப்பிய தன்னுடைய #அம்மா #அலங்காரத்திற்கும் செய்யும் துரோகம் எனக் கூறி அப்பு, இந்துவை ஏற்க மறுத்துவிடுகிறான்.
அதனால் கோபமடைந்த இந்து, அப்புவிடம்: … “அவனுடைய அம்மாவின் நடத்தை சரியில்லை” எனவும், “அவள் வேறொருவரோடு உறவு வைத்துள்ளதாகவும்” கூறுகிறாள். அதனால் கோபமடையும் அப்பு பின்னர் சென்னைக்கு சென்று அங்கு அவனுடன் பிறந்தவர்கள் ஏழு பேர், அம்மா, அப்பா ஆகியோருடன் வழ விரும்புகிறான்.
பதினாறு வருடம் கழித்து வரும் அப்பு சில நாட்களிலேயே உண்மையை அறிந்து கொள்கிறான்.
ஆம் இந்து கூறியது உண்மைதான். அப்புகுடும்பத்தாரின் வீட்டிற்கு வரும் #பணக்கார_சூத்திரன் #சிவசு அந்த இல்லத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றவனாக இருப்பதையும், தன்னுடைய அம்மாவுடன் மிக அந்நியோன்யமாக நெருங்கி இருப்பதுபற்றியும் அறிகிறான்.
அப்புவின் அண்ணன் ஒருவன், சிவசு ஜாடையில் இருப்பதையும் உணர்கிறான்.
இது வீட்டில் உள்ளஅனைவருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கிறது. ஆனாலும் அதைக் கண்டு கொள்ளாமல், எல்லாரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள்.
அப்பா, அக்கா, அண்ணன், என எல்லோருக்கும் தெரிந்த உண்மை தனக்குத் தெரியாமல் போனதை உணர்கிறான் அப்பு !
அதனால் மனமுடைந்த அப்பு, மீண்டும் வேத பாடசலை உள்ள மடத்திற்கே திரும்புகிறான்.. இந்துவோடு சேர்கிறான்.
இதற்கிடையில் அப்புவின் மீது அளவிலாப் பாசம் வைத்திருக்கும் அவன் #அம்மாஅலங்காரம் அப்புவைப் பிரியமுடியாமல் வேத பாடசாலைக்கு வந்து அப்புவைப் பார்த்துவிட்டு, தான் செய்த பாவங்களுக்குக் #கழுவாய் தேடுவதற்காகக் #காசிக்குச் செல்கிறாள்.
இத்துடன் புதினத்தை முடித்து விடுகிறார் தி.ஜானகிராமன்,
இன்று திரு.ஜானகிராமன் பிறந்த நாள், 28, பிடப்ரவரி (1921)
வாழ்க வளர்க அவர் புகழ் !
(தொகுத்து எழுதப்பட்டது)
Prem: மரப்பசுவைப் பற்றி நேற்று கதையாடல் ஒன்று கேட்டுக் கொண்டிருந்தேன்…. இன்னும் முடிக்கவில்லை
Latha Kumar: கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்ங்க.
Shan: நான் படித்த முதல் தி.ஜா வின் நாவல். மிக சிறப்பாக இருக்கும். அதுவும் அறுபதுகளில் ஒரு எழுத்தாளர் இந்த நாவலை எழுதியது என்பது இன்னும் வியப்பாகவே இருக்கும்
Shan: தனது முதல் எண்ணிக்கையை ( பதிவு) தொடங்கி உள்ளார் நமது பிரேம்👏👏👏