Posts
நடனமும், சமையலும்!
நடனமும், சமையலும்!
Thamilvanan
‘வாவ்’ என்று நீங்கள் வியந்த நடனத்தை ஞாபகப்படுத்துங்கள்! மனமும், உடலும் ஒத்திசைந்து நிகழ்த்தும் அதிசயம் உங்கள் கண் முன் வரும்.
மனம் முழுவதும், உடலின் அசைவுகளில் லயித்தால், நடந்தால் கூட நடனமாகும். அதில் லயம் இருக்கும்.
சமையலும் அப்படித்தான். செய்யும் உணவில் உங்கள் மனம் லயித்தால், வெந்நீர் கூட அமிழ்தம் ஆகும். உங்கள் கை வித்தைகள் செய்கிறது என்று உண்பவர்கள் சொல்வார்கள்.
உடலசைவுகள், கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால், நடனம் சகிக்காது. உப்போ, காரமோ, இனிப்போ கூடினாலும், குறைந்தாலும், சமையல் சகிக்காது.
நடனத்தில் அசையும் உடலுடன், மனமும் அசைகிறது. சமையலில், பொங்கும் பாலுடன் மனமும் பொங்கி வழிகிறது.
read more
Posts
நம் நாட்டுக் கப்பற்கலை
புத்தக வாசிப்புத் தொடர் - (மார்ச் வாசிப்பு மாரத்தான்) வாசகரின் பெயர் : லதா குமார்*
வாசகரின் ஊர்/ மாநிலம் : நோவாய்,மிச்சிகன் (Novi MI)
புத்தகத்தின் பெயர்: நம் நாட்டுக் கப்பற்கலை
எழுத்தாளர் : சாத்தன்குளம் அ. இராகவன்
பக்கங்கள் : 422
தமிழர்களின் கப்பற்கலை பற்றிய பல அரிய தகவல்களோடு விளக்கப்படங்களுடன் தமிழில் வெளிவந்த முதலாவது நூல்.
நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் இதை நம் பெருமைக்குரிய கப்பலோட்டிய தமிழர் திரு. வா. உ. சிதம்பரனாருக்கு காணிக்கை ஆக்கியது இதன் மற்றொரு சிறப்பு.
பண்டைக்கால முக்கிய துறைமுகங்கள், இக்கால முக்கிய துறைமுகங்கள், வானியல், விண்ணியல், நீரோட்டம், பருவ நிலை மாற்றங்கள், கட்டுமரம் முதல் கடல் கலங்களின் வகைகள் (வரைப் படங்களுடன்) , அதற்கான மரங்கள், அதன் அமைப்பு, தொழில் நுட்பம் மற்றும் பயன்பாடுகள் என முதல் பாகத்திலும்…
read more
Posts
நாகர்கோவிலிலிருந்து to மெளன்டன்வியூ
நாகர்கோவிலிலிருந்து to மெளன்டன்வியூ Raj Uncle
நாகர்கோவிலிலிருந்து மெளன்டன்வியூ வந்து இன்றைக்கு இரண்டு மாதமாகிறது. ஆனால், இருபது வருடங்கள் ஆனதுபோல் மன இறுக்கம். அறுபதே நாளில் எப்படித் தலைகீழாக என் வாழ்க்கை மாறிவிட்டது?
பிறந்தது முதல் அறுபத்தைந்து வருடங்கள் நாகர்கோவில் ஒழுகினசேரி கிராமத்தில். காலை எழுந்திருப்பது, பழையாற்றில் குளியல், சேது லட்சுமிபாய் பள்ளிக்கூடத்தில் படிப்பு, லாலாக்கடை அல்வா, சங்கர அய்யர் ஹோட்டல் ரசவடை, லட்சுமி தியேட்டர் தரை டிக்கெட் சினிமா என்று சிறுவயது வாழ்க்கை. அப்புறம் மணிமேடை ஜங்ஷனில் இருக்கும் போஸ்ட் ஆஃபீசில் கிளார்க் வேலை. மாமா மகள் சரோஜாவோடு கல்யாணம். கறிவேப்பிலைக் கொழுந்தாக மகன் மணி. படிப்பில் படு சுட்டி.
read more
Posts
நிலை நிறுத்தல்
நிலை நிறுத்தல் கி. ராஜநாராயணன்
Swami
"மூதேய் மூதேய் வெறுவாக்கலங்கெட்ட மூதேய்.” எப்பேர்க் கொத்தி வேலையாளாய் இருந்தாலும் வசவு வாங்காமல் தீராது அவரிடம். இது சாதாரணம்; பெரிய முதலாளிக்கேண்ணு உள்ள கெட்டவார்த்தை வசவுகள் இருக்கு புழுத்தநாய் குறுக்கே போகாது அதைக் கேட்டால். அதோடு எத்தனையோதயா அவரிட்டெ அடியும் வாங்கி இருக்கான் இந்த மாசாணம் பயல்.
ஏசுங்க, எம்புட்டு வேனுமானாலும் ஏசுங்க என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டான் அவன். -
இப்பொ அவன் வாங்கின வசவுக்கு ஒரு காரணமும் கிடையாது. “சுண்ணாம்பு எடுத்துட்டுவாலே மாசாணம்"ண்ணாரு எடுத்துட்டு வந்தான்.
ஒரு பிஞ்சு சுண்டைக்காய் அளவுதான் வெத்திலையில்
வைத்துக் கொண்டாரனும்; மஞ்சாடி கூடீரப்படாது, வசவுதான்.
read more
Posts
படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்தது Indira
சாதிக்க முடியாத இலக்கை வாழ்க்கை கொடுக்கும்போது அழிக்கவே முடியாத தடயத்தை அந்த வாழ்க்கையில் பதியவைத்துவிட்டு செல்வது தான் திறமையின் சிறப்பு ஆறுதல் ஏதுமின்றி அழுது முடித்த பின்பு வரும் நம்பிக்கைக்கு பலம் சற்று அதிகம் தான் அடுத்த நொடி மறைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்களே இந்த வாழ்க்கை எந்த நிமிடமும் முடிந்து போகும் அது வரை அன்பை விதைத்து அறுவடை செய் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத வலிகளை எல்லாம்,நம்மால் வெறுக்கவே முடியாத ஒருவரால்தான் கொடுத்திருக்கமுடியும்…
read more
Posts
பத்தாயம்
பத்தாயம் Latha Kumar: வாமடை பத்தாயம் விளக்கம் அளிக்க முடியுமா?
Shan: மடை என்பது நீர் போகும் ஒரு வழி என்பது நமக்கு தெரியும். ஏரி குளம் ஆறுகளில் பார்த்து இருப்போம். அதே போல வயலிலும் இரு மடைகள் உள்ளது. நீர் உள்ளே வரும் வழி வாய்மடை . நீர் வெளியேறும் வழி வடிமடை. அந்த வாய்மடை தான் வாமடை என்று எங்க வட்டாரத்தில ( தஞ்சை புதுகை) சொல்லுவோம். அது ஒரு வட்டார வழக்குச் சொல்.. மழைக் காலத்தில்( ஐப்பசி) பெரும் மழை பெய்வதினால் வயலுக்கு நீர் தேவையில்லை. ஒரு வேளை அதிக நீர் வரத்து வாமடை வழியாக வந்தால் வயலின் வரப்புகள் தாங்காமல் உடைப்பு ஏற்ப்படும்.
read more
Posts
பத்தாயம்
உப்பு Shan
உப்பு பற்றியும் இருக்கும்…நல்ல களஞ்சியம் அந்த புத்தகம்
Swami: உப்பு சரி…உப்புமா பத்தி வரலாறு கிடைக்குமா??? 😁
Swami: உப்புமா Dish ..நமது பாரம்பரியமா..இல்லை அயலகத்திலிருந்து தொற்றிக் கொண்டதா?
இரும்பு சட்டியில் செய்த அரிசி உப்புமா..என்னோட Favorite..
உதிரி உதிரியாக ஒட்டாமல் செய்த சேமியா உப்புமா ல..தேங்காய துருவி மேல போட்டு சாப்பிட்டா சிறப்பாக இருக்கும்..
இஞ்சி தூக்கலாக போட்டு பிறு பிறு வென்று வறுத்த வேர்கடலை போட்ட கோதுமை ரவாஉப்புமா..ஒரு Plate fulla வைம்மா னு சொல்லும்…
உப்புமாவின் வரலாறு தெரிந்தவர்கள் தகவல் கொடுங்கள்.
Shan: சிற(உ)ப்பு!. உண்மையை சொல்லப் போனால் மறைந்த பேரா. திரு தொ.
read more
Posts
பாரசீக மொழியிலிருந்து
பாரசீக மொழியிலிருந்து Vinoth
நான் உண்மையான தோற்றத்தை மறந்துவிட்டேன், ஆனால் அது என் குழந்தை பருவத்திலிருந்தே என் மனதில் ஒட்டிக்கொண்டது. இது பாரசீக மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன்
காதலைப் பற்றிய பாடல் வரிகள், ஒரு பையன் ஒரு பெண்ணிடம் தன் காதலைப் பற்றி விளக்குவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது
அவன் அன்பு பணம் போன்றதா? பின்னர் பணம் கைமாறு என்று கூறி நிராகரிக்கிறார்
அப்போது அவன் கேட்கிறான் அவனுடைய காதல் நிலவு போன்றதா? இல்லை அது குறைந்து கொண்டே செல்லும் மற்றும் மறைந்து மீண்டும் மீண்டும் வளரும்
அது தண்ணீர் போன்றதா? அவை ஆவியாகி மீண்டும் விழும்
read more
Posts
பாலங்கள் 1983
புத்தக வாசிப்புத் தொடர் - (மார்ச் வாசிப்பு மாரத்தான்) வாசகரின் பெயர்: லதா குமார்
வாசகரின் ஊர்/ மாநிலம்: நோவாய்,மிச்சிகன் (Novi MI)
புத்தகத்தின் பெயர்: பாலங்கள் 1983
எழுத்தாளர்: சிவசங்கரி
பக்கங்கள்: 172
பாலங்கள்: 1983 ‘கஸ்தூரி ஸ்ரீனிவாசன்’ விருது மற்றும் பத்தாயிரம் ரூபாய் பரிசு பெற்ற நாவல்.
1983 ல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இந்த நாவல் இன்றும், என்றும் பேசப்படுகிற, ஆவணப்படுத்தப்பட வேண்டிய அரியதொரு கதை.
இந்த நாவலில் 1907 முதல் 1998 வரை பிராம்மண சமூகத்தில் ஏற்பட்ட சம்பிரதாய உருமாற்றத்தினை படிப்படியாக விவரித்து சொல்கிறார்.
இந்தக் கதை மூன்று காலகட்டங்களில் நடக்கும் (1907 - 1931, 1950- 1964, 1965 - 1985 கடைசியாக 1998) மூன்று விதமான கதைகள் கொண்டது.
read more
Posts
போரும், போர் நிகழ்ச்சிகளும்...!
போரும், போர் நிகழ்ச்சிகளும்…! Shan
கரிகாலன் பகைவர் நாடுகளைக் கைப்பற்றினான், அவன் கைப்பற்றிய ஊர்களில் மதில்கள் அழிந்தன. கூகைகள் இருந்து குழறின என்று #பட்டினப்பாலை கூறுகின்றது.
படையெடுக்கும் அரசனைச் சேர்ந்த வீரர்கள் பகைவர் நாட்டு ஊர்களைக் கொளுத்துதல் வழக்கம்; கோட்டைகளை இடிப்பது வழக்கம்; இந்த அழிவுகளை எல்லாம் #புறநானூறு பாடல்களில் காணலாம்.
பிற்கால அழிவுகளைக் #கலிங்கத்துப்பரணி பாடல்களில் விரிவாகக் காணலாம். “நீ படையெடுத்தால் பகைவர் நாடு அழிவுறுமே” என்று புலவர்கள் வருந்திப் பாடிய பாடல்கள் பல. இத்தகைய பாடல்கள் #கொற்றவள்ளை என்று பெயர் பெறும்.
அரசனது தலைநகரில் கட்டடங்கள் இடிக்கப்படும்; அந்த நிலம் கழுதைகளால் உழப்படும்: கவடி விதைக்கப்படும். வென்ற அரசர், வெல்லப்பட்ட நாட்டுக் குளங்களில் தம் போர் யானைகளை நீராட்டுவர்; வென்ற நாட்டில் தங்கள் வெற்றித் தூண்களை நாட்டுவர் அல்லது தங்கள் இலச்சினையைப் பொறிப்பர்.
read more