நம் நாட்டுக் கப்பற்கலை
புத்தக வாசிப்புத் தொடர் - (மார்ச் வாசிப்பு மாரத்தான்)
வாசகரின் பெயர் : லதா குமார்*
வாசகரின் ஊர்/ மாநிலம் : நோவாய்,மிச்சிகன் (Novi MI)
புத்தகத்தின் பெயர்: நம் நாட்டுக் கப்பற்கலை
எழுத்தாளர் : சாத்தன்குளம் அ. இராகவன்
பக்கங்கள் : 422
தமிழர்களின் கப்பற்கலை பற்றிய பல அரிய தகவல்களோடு விளக்கப்படங்களுடன் தமிழில் வெளிவந்த முதலாவது நூல்.
-
நுண்கலைச் செல்வர்
சாத்தன்குளம் அ. இராகவன்அவர்கள் இதை நம் பெருமைக்குரிய கப்பலோட்டிய தமிழர் திரு. வா. உ. சிதம்பரனாருக்கு காணிக்கை ஆக்கியது இதன் மற்றொரு சிறப்பு. -
பண்டைக்கால முக்கிய துறைமுகங்கள், இக்கால முக்கிய துறைமுகங்கள், வானியல், விண்ணியல், நீரோட்டம், பருவ நிலை மாற்றங்கள், கட்டுமரம் முதல் கடல் கலங்களின் வகைகள் (வரைப் படங்களுடன்) , அதற்கான மரங்கள், அதன் அமைப்பு, தொழில் நுட்பம் மற்றும் பயன்பாடுகள் என முதல் பாகத்திலும்…
-
இலக்கியம் மற்றும் அயல் நாட்டவர்களின் நூல்களில் உள்ள குறிப்புகளின் மூலம் அந்தக் காலத்தில் நடைபெற்ற தமிழகத்தின் கடல் வாணிபம் எந்த நாடுகளுடன் நடைபெற்றது என்பதைப் பற்றி விரிவாக இரண்டாம் பாகத்திலும்….
-
இடைக்காலத்தில் எழுந்த கலங்கள், திருவாறன்விளை படகு விளையாட்டு (ஆறன்முள வள்ளங்களி), நம் பாரத நாட்டின் புகழ் பெற்ற கடல் வணிக நகரங்கள் பற்றி மூன்றாம் பாகத்திலும்…
-
கடல் சார்ந்த உணவுகள், மீன் பிடிக்கும் சாதனங்கள், குளங்கள் முதல் கடல் வரையிலான நீர் போக்குவரத்து குறித்து நான்காம் பாகத்திலும்….
-
விடுதலைக்குப் பின் இந்திய வணிகம் மற்றும் கடற்படையின் வளர்ச்சி என ஐந்தாம் பாகத்திலும் மிக விளக்கமாக பதிவு செய்திருக்கிறார்.
-
கடல் என்றாலே கப்பல் என்ற சொல்லை மட்டுமே அறிந்த நமக்கு அதன் விரிந்த பெயர்கள் தொடங்கி இன்றைய வரலாறு வரை அறிய அனைவரும் உங்கள் குழந்தைகளோடு படிக்க வேண்டிய புத்தகம் இது.
லதா குமார். 4/10/2023