பாரசீக மொழியிலிருந்து
பாரசீக மொழியிலிருந்து
Vinoth
நான் உண்மையான தோற்றத்தை மறந்துவிட்டேன், ஆனால் அது என் குழந்தை பருவத்திலிருந்தே என் மனதில் ஒட்டிக்கொண்டது. இது பாரசீக மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன்
காதலைப் பற்றிய பாடல் வரிகள், ஒரு பையன் ஒரு பெண்ணிடம் தன் காதலைப் பற்றி விளக்குவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது
அவன் அன்பு பணம் போன்றதா? பின்னர் பணம் கைமாறு என்று கூறி நிராகரிக்கிறார்
அப்போது அவன் கேட்கிறான் அவனுடைய காதல் நிலவு போன்றதா? இல்லை அது குறைந்து கொண்டே செல்லும் மற்றும் மறைந்து மீண்டும் மீண்டும் வளரும்
அது தண்ணீர் போன்றதா? அவை ஆவியாகி மீண்டும் விழும்
அது காற்று போன்றதா? வாழ்வதற்கு இன்றியமையாததாக இருந்தாலும் அது மாசுபடும்
அது போன்ற விவரங்கள் செல்கிறது, இறுதியாக அவர் பின்வருமாறு முடிக்கிறார்.
இந்த இறுதி வரியால், அது என் மனதில் பதிந்தது.
காதல் ஒரு கனவு போன்றது, ஏனென்றால் நாம் தூங்கும்போது அது வாழ்க்கை. இது ஒரு குறிக்கோளாக பகலில் நம் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துகிறது
Shan: கங்கு கரை காணா(நா)த காதலால் தங்கும் நீரை காண(நா)த புலவரே.. பூமாலை சூடி கணையாழி இட்டவரை பாமாலையால் பாடாமல் ஓங்கு கழியெடுத்து தேங்கு - நீர் அடைப்பை திறம்பட அகற்றி - சதா சாடை பேசமால் சாந்தமாக்கிடுங்க! திருவிழா ஞானம் Swami “ஒன்னு வைச்சா பத்து, பத்து வைச்சா நூறு, நூறு வைச்சா ஆயிரம்..அரிஷ்டம் கொட்டும் ஆட்டம், ஆடாம போனாதான் நட்டம்” என திருவிழா பஜாரில் கோவில் ரதவீதியில் கூவிக் கொண்டிருந்தவன் எல்லாரையும் ஈர்த்துக்கொண்டிருந்தான் என்னையும் சேர்த்து. பாக்கெட்டில் இருந்த நூறுரூபாய் என்னை அவனிடத்தில் கொண்டு போய் விட்டது. அவன் மூணு சிவப்பு டம்ளரில் ஒன்னுல பச்சை பந்தை வச்சி..மூணையும் கவுத்தி மாத்தி மாத்தி தலை சுத்துற மாதிரி மந்திரித்துவிட்டு எதுல பந்துஇருக்குனு பெட் கட்டச் சொன்னான். நான் கண்ணுல விளக்கெண்ணை போட்டுலா பாத்தேன்.. நடுல உள்ளதுலதான் இருக்கு. ஒருத்தனும் பெட் கட்டல.. அவன் பீடிய பத்தவைச்சிகிட்டே ஒவ்வொரு டம்ளரா நிமித்தினான்…நான் நினைச்சது கரெட்டு. நடு டம்பளர்லதான் பந்து இருந்தது…
திரும்பவும்…ஒன்னு வைச்சா பத்து..பத்து வைச்சா நுறு னு..அதிர்ஷ்டத்தை அரிஷ்டம்னு அவன் சொன்னதை யாரும் கண்டுக்கல…எல்லாருக்கும் அவன் பந்துள்ள டம்பளரை எங்கநகத்துறான் ங்கிறதுதான் பார்வையா இருந்துச்சு.
இப்ப இடது பக்க டம்ளர் …நான் தெளிவா பாத்துட்டேன்..இப்பவும் ஒரு பய பெட் கட்டல…எவனுக்கும் என் அளவுக்கு கண்ணு தெரியாதோ என்னவோ…இப்ப டம்பளரை நிமித்தினான்…தே இடது பக்க டம்பளர்லதான் பந்து இருக்கு..அடடா பெட் கட்டிஇருக்கலாமோனு தோணுச்சி. திரும்பவும் ஆரம்பிச்சுட்டான்…அரிஷ்டம் எனக்கு இருக்கிறதா உள்ளுக்குள்ள பட்சி சொல்லுச்சு..முதல்ல எதுக்கும் ஒத்த ரூபாயை வைப்போம்னு நினைச்சிட்டு இருக்கும்..பந்து உள்ள டம்பளர் எங்க போதுனு கவனமா பாத்துட்டே இருந்தேன்..இப்ப மத்தியில உள்ள டம்பளர்…மத்தி டம்பளர் ஒரு ரூபாய் பெட்னுநான் சொல்ல எல்லா ஆட்களும் என்னையே பாக்க..எனக்கு ஒருமாதிரி இருக்க..நல்ல வேளை அவன் பீடிய கீழப்போட்டுட்டு மத்தி டம்ளரை திறக்க பந்து அதுல இருந்தும்..எல்லாரும் கைதட்டினதுல எனக்கு கோடி ரூபா லாட்டரி விழுந்த மாதிரி…பக்கத்துல சரியா கண்ணு தெரியாதபெரிசு ஒன்னு காசை கட்டி ஏமாந்து போகாதீங்கள னு சொல்லிட்டு கூட்டத்தை விட்டு போனதை யாரும் கண்டுக்கல. அவன் டவுசருக்குள்ளே இருந்து பத்து ரூவாயை எடுத்து என்கிட்ட கொடுத்துட்டு ..திரும்பவும் ஒன்னு வைசௌசா பத்து…பத்து வைச்சா நூறு..நூறு வைச்சானு…சொல்லவும்..பாக்கட்டில இருந்து நூறுரூபா என் கைகக்கு வந்துட்டு…இப்ப வலது டம்ளர்…நல்லா பாத்துட்டேன்… வலது பக்கம் நூறு பெட்டுனு நான் சொன்னதும்…என்ன மாதிரியே இன்னும் சிலர்..பத்து..நூறுனு வலது பக்க டம்ளர்ல பெட் வைக்க..எனக்கு பெருமையா இருத்ததுச்சு..நாம கரக்கிட்டா வைக்கிறது தெரிஞ்சி நாம சொல்றதுல பெட் வைக்கிறாங்கனு..
எல்லாரும் உத்து பாத்துட்டு இருக்கோம்..அவன் டம்பளரை நிமித்தாம ..வேறயாராவது பெட்டு வைக்கிறீங்களானு கேக்க..இன்னும் ஒருத்தன் பத்து ரூவாயை அதே வலது டம்ளரில சொல்லவும்.. எல்லாரும் காசை போடுங்கனு அவன் சொல்ல..என்ன மாதிரியே எல்லாரும் காசை அவன் முன்னாடி வைக்கவும்…அவன் வலது பக்க டம்பளரை நிமித்தினான்…எல்லாருமே அதிர்ந்து பாக்க உள்ள பந்து இல்லை..எப்படி இப்படிஆச்சுனு…யோசிக்கும் போதே கண்ணுக்குமுன்னாடியே என்நூறுரூவா என்னைபாத்து சிரிச்சிகிட்டே அவன் டவுசருக்குள்ளே போயிட்டு…வந்ததே வெறி எனக்கு..இன்னும் ஒருதடவை ஆட்டத்தை பொறுமையா பாத்துட்டு..அவன்கிட்ட ஜெயிச்ச அரிஷ்ட பத்து ரூபாயை வைச்சு என்நூறை திரும்ப வாங்கிடுவேனு மனசுக்குள்ள கறுவிட்டு நான் இருக்க… சிலர்போனாங்க சிலர் புதுசா வந்து சேர்ந்தாங்க…
ஒன்னு வைச்சா பத்து..பத்து வைச்சா நூறுனு அவன் சொல்லிகிட்டே டம்ளரை நகத்தும் போது..அவன் டவசருக்குள்ளே போய் உக்காந்த நூறு ரூபாவ நினைச்சு என் நெஞ்சு கணத்தது..இப்ப திரும்பவும் மத்தி டம்பளர் லதான் பந்து இருக்கு..நான் கம்முனு இருந்தேன்…பக்கத்துல இருந்தவன் சும்மா இல்லாம..என்னை பாத்து நீ பெட்டு கட்டலயானு கேக்க நான் கூட கட்டலாமானு யோசிச்சு..இல்லை அடுத்த ஆட்டம்னு மனசை கட்டுபடுத்திகிட்டேன்…எவனுமே பெட் கட்டல..நான் நினைச்சதுதான் சரி..மத்தி டம்ளர்லதான் பந்து…ஆகா கட்டி இருக்கலாமோ? பக்கத்துல கேட்டவன் கடவுள் மாதிரி நம்மள கட்ட சொன்னானோ னு..நினைச்சிகிட்டே பத்து ரூபாயை கையில எடுத்துகிட்டேன்..அடுத்த ஆட்டத்துக்கு…
திருவிழா முடிஞ்சி வீட்டுக்கு வந்து படுக்கும் போது மணி 12 ஆயிட்டு. வெளியில கொடில சட்டைய கழட்டிப் போட்டுட்டு படுத்தேன்…ஒரே புழுக்கம் உள்ளேயும் வெளியேயும். Swami: இதை ஒரு Web series மாதிரி…எழுதப் போறேன்…😁 எங்க ஊருல பத்து நாள் திருவிழா நடக்கும்..பத்து கதைகள்.. திருவிழா ஞானம் - ரெண்டாம் நாள்
முதல் நாள் திருவிழா தான் முடிஞ்சிருக்கு..இன்னும் ஒன்பது நாள் இருக்கு. நேத்து ராத்திரி கனவுல பெரிசு திரும்பவும் வந்து பெட்டுல காசு கட்டி ஏமாந்து போகாதீங்களனு சொல்லிட்டு போனது உறுத்திகிட்டே இருக்கு. இன்னைக்கு பெட் கட்ட போகக்கூடாது. நேத்து போயி நூறு ரூவா வெட்டியா போயிட்டுனு மனசுக்குள்ளே நினைச்சிகிட்டே அன்னைய பொழுது கமிஷன் மண்டில மிளகாய் வந்த கணக்கை முடிச்சிட்டு சாயங்காலம் பொழுது சாயவும் ஹெர்குலிஸ் வண்டிய எடுத்துட்டு கிளம்பினேன்.
ஒரு ரவுண்டு சுத்திட்டு தெக்குரதவீதியிலஇருக்கிற செல்வம் மரக்கடையில ஆஸ்பெஸ்டாஸ் சாய்ப்புல சைக்கிள சாத்திட்டு பொடி நடையா திருவிழா கூட்டத்தில ஐக்கியமானேன்.
மணியண்ணன் பெட்டி கடையில கோலி சோடா ஒன்னை குடிச்சிட்டு கணக்குல எழுதிட்டு நேரா குஜராத்காரன் கொண்டு வந்திருக்கிற ஒட்டகத்தை பத்தி எல்லாரும் பேசினதை கேட்டு அதை பாக்க கிளம்பினேன்.
ஒட்டகம் யானை அளவுக்கு தண்ணி குடிக்கும்னு துபாய்க்கு போயிட்டு வந்த தோஸ்து மஜீத் சொல்லி கேட்டுருக்கேன்.
அங்க போகும் போதே ஒன்னு வைச்சா பத்து..பத்து வைச்சா நூறுங்குற சத்தம் என்னையுமறியாம திரும்பி பாக்க வச்சது. நேத்தைவிட கூட்டம் அதிகமா இருந்தது. சரி போய் பாப்போம் யாரு காசை விடறாங்கனு போனா..எல்லா பயலும் வேடிக்கை தான் பாக்குறாங்க. நேத்து நான் காசை விட்டதுக்கப்புறம் எவனும் பெட்டு கட்டல..ஊருக்கே நாமதான் இ.வா வோனு தோணுச்சு.
அப்பத்தான் அங்க வந்த மணியத்தான் பையன் சின்னவன் ரமேசு ஆறாங்கிளாஸ் படிக்கிறவன் பெட்டு கட்டுனான்.
நேத்து என்னையே ஏமாத்திட்டான் இந்தகவாணிப்பய இந்தப் பொடியன் எம்மாத்திரம்னு நினைச்சேன். ஆனா, அந்தக் களவாணிப்பய ரொம்ப நல்லவன் மாதிரி போ..போ நீ யெல்லாம் பெட்டு கட்டாதேனு விரட்டினான். ரமேசு கேக்குற மாதிரியில்லை..திருவிழாக்கு வந்திருக்குற விருந்தாளிங்கலாம் காசு கொடுத்திருப்பாங்க போல. புது பத்து ரூவா தாள் நாலஞ்சு வச்சிருந்தான் ரமேசு.எனக்கும் மனசு கேக்கல..எலே மருமனே, காச கரியாக்காதல, போய் எதாவது பண்டமாது வாங்கித் தின்னுல னு சொன்னேன். ரமேசு கேக்குற மாதிரி தெரியல..அந்தக் களவாணிப் பயலும் இவன் கையில பளபளத்த புது நோட்டை பாத்ததும் ஒன்னும் சொல்லல. கொஞ்ச நேரம் அந்த களவாணிப்பய ரமேச உத்து பாத்துட்டு என்னமோ பெரிய ஞானி மாதிரி
ரமேசை பாத்து “சரி பெட்டு சொல்லு” னு சொன்னான்.
ரமேசும், கரெக்ட்டா வலது பக்க டம்ளர்லதான் பெட்டு கட்டினான் 5 ரூவாய்க்கு. ஆச்சரியம், அதுல பந்து இல்லை. அடுத்தடுத்து விடாம எல்லா காசையும் பெட்டு கட்டினான். நானும் கவனிச்சிட்டே தான் இருந்தேன். எல்லாமே சரியாத்தான் சொன்னான்..ஆனா எதுலயுமே பந்து இல்லை. ரமேசு ஐம்பது ரூவா விட்டுருப்பான் கிட்டத்தட்ட. இப்பஅழாத குறையா எல்லாத்தையும் விட்டுட்டுஎந்திரிச்சி போயிட்டான்.
எனக்கு வயித்தெரிச்சலாஇருந்துச்சு. அதுக்குள்ள ஒட்டககாரன் சங்கு ஊதின சத்தம் கேட்டு.. எல்லாரும் அங்கபோனாங்க..நானும் அவங்க கூட கிளம்பிட்டேன்.
நாலு நடை நடந்ததும், எதோ வேகம் நேரா அந்தக்களவாணிப்பயகிட்ட போய் இப்படி சின்னபயலை ஏமாத்தி சம்பாதிச்சிரிக்கியே நியாயமானு ஒரு வார்த்தை கேக்கனும் தோணுச்சி..சரினு திரும்பி அவன் டெண்டுகிட்ட போனேன்..அங்க அவன் சம்சாரமும் அவனை திட்டிட்டு இருக்கிறது காதுல விழுந்துச்சு “ஏய்யா, அந்த சின்ன புள்ளைகிட்ட போயி இப்படி காச வாங்கனுமா? ஒரு தடவையாவது அவனை செயிக்கிற மாதிரி விட்டிருக்கலாம்ல, நீ யெல்லாம் மனுசனா னு” நான் நினைச்சதையே அவளும் சொல்லிட்டு இருந்தா.
வீட்டுக்கு வந்து கொடியில சட்டைய கழட்டி போட்டுட்டு படுத்ததும் அவர் சொன்ன வார்த்தை திரும்ப திரும்ப மனசுக்குள்ளேயே ஓடுது.
“அந்த அம்பது ரூபா அவனை இனி சூதாட்டம் பக்கமே போக விடாது, இந்த வயசுல அவன் கத்துக்குற பாடம் ஆயுசுக்கும் நிக்கும். நான் அவனை ஒரு ஆட்டம் செயிக்க வைச்சாகூட அது தப்பான உதாரணமாயிடும், சூதாட்டத்துல காசு செயிக்கலாம்னு அவன் மனசுல பதிஞ்சிடும். இப்ப அவன் தோத்த அம்பது ரூவாய் வாழ்க்கையில மறக்கமுடியாத பாடத்தை கத்து கொடுத்திருக்கும்”
அவர் சொன்னதுல ஒரு நியாயம் இருந்துச்சு. நானும் சின்னப் புள்ளையிலே இந்தமாதிரி ஏமாந்திருந்தா இப்ப பெட்டு கட்டியிருக்க மாட்டேன். அவர் ஞானிதான். மஞ்ஞை Shan: கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி! உண்கண்
நீரொடு ஓராங்குத் தணப்ப,
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.
(கபிலர் - குறுந்தொகை) Shan: தோழி! நீ வாழ்க! காட்டிலுள்ள மயில் பாறையில் ஈன்ற முட்டைகளை, வெயிலில் விளையாடும் குரங்குக் குட்டிகள் உருட்டும் இடமாகிய, மலைநாட்டையுடையவனாகிய தலைவனது நட்பு என்றும் பெருமைக்குரியது. ஆனால், அவன் என்னைவிட்டுப் பிரிந்ததால், மை தீட்டிய என் கண்களிலிருந்து நீர் பெருகுகின்றன. அந்தப் பிரிவை நினைத்து ஒரேயடியாக வருந்தாமல், பொறுத்துக்கொள்ளும் ஆற்றல், மனதில் வலிமை உடையவர்களுக்கு மட்டுமே இருக்கும். எனக்கு அது இல்லையே! Shan: அருஞ்சொற்பொருள்: கானம் = காடு; மஞ்ஞை = மயில்; அறை = பாறை; ஈனுதல் = பெறுதல்; முசு = குரங்கு (கருங்குரங்கு); குருளை = குட்டி; கேண்மை = நட்பு; நன்று = பெருமை; உண்கண் = மை தீட்டிய கண்கள்; உள்ளாது = நினையாது; ஒராங்கு = ஒரு படியாக; தணத்தல் = பிரிதல். Shan: இருந்தாலும் இருந்து இருக்கும்😀 இன்னும் நீங்க மஞ்ச மயக்கத்துல ( csk ) தான் இருக்கிங்க போல வசிகரன்! Shan: சிறப்பு.. 👏👏 இதை வலைப்பூவில் பதிவேற்றம் செய்து விடுவோம்!! Swami: மஞ்ச மயக்கத்தை இரட்டுற மொழிதலில் கூறியது போலிருக்கிறதே !🤪 [5/30/23, 10:45:45 AM] Shan: 😂😀 கம்பரின் வரிகள்.. Shan “பஞ்சி ஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச் செஞ்செவிய கஞ்சகிமிர் சீறடிய ளாகி அஞ்சொல் இள மஞ்ஞை யென அன்னமென மின்னும் வஞ்சி யென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”. திருவிழா ஞானம் - மூன்றாம் நாள்
காலையிலே கோணாரு பால் கறக்க வரல போல. இல்லைனா எந்திரிக்கும் போது கருப்பட்டி காப்பி வாசம் நாசியில உள்ளபோயி நடு உச்சியிலே சிலுப்பிவிடும். சிக்கிரி கலந்த காப்பிதூளும் திசையன்விளை கருப்பட்டியும் காப்பியை தேடி அலைய வைக்கும். கோணார் வராட்டி நான்தான் போய் மடியில கைவைக்கனும். எலேய் மாட்டுக்கு கழனியும் ரெண்டு வைக்கலையும் போடு நான் போய் பல்லை உடைச்சிட்டு வறேனுட்டு உமிக்கரியையும் உப்பையும் கேலண்டர்ல தேதி கிழிச்ச தாளுல மடிச்சி தெக்க பம்புசெட்டைப்பாத்து போனேன். வாய் கொப்பளிக்கும் போதே இன்னைக்கு என்னலாம் பண்ணனும்னு மனசுக்குள்ள ஓட்டி பாத்துகிட்டேன். பல்லை தேச்சிட்டு கறவை மடில கை வைச்சதிலேருந்து பொழுது சாயுற வரைக்கும் வேலை தலைக்குமேல இருந்ததுல நேரம் போனதே தெரியல. சேக்காளி கொத்தனார் மாரியப்பன் வந்து ரதவீதிக்கு போறோம்ல வரீயானு கூப்பிட்டதும்தான் அரக்க பரக்க கடைய சாத்திட்டு கிளம்பினேன். சைக்கிள் புதுசு, அதுல மாரியப்பனை டபுள்ஸ் ஏத்திட்டு போகனுமா? நான் ஓட்டுறேன்பாம். கொடுக்காம இருக்கமுடியாது..வேலை இருக்குனு மாரியப்பனை முன்னாடி போக சொல்லிட்டு சைக்கிள போய் செல்வம் கடையில போட்டுட்டு ரதவீதிக்கு போலாம்னு நம்பியார் மாதிரி திட்டம்போட்டு மாரியப்பனை கழட்டிவிட அவனை போக சொன்னேன். அவனும்,,சரில நேர மனோகர் ஹோட்டல் வந்துரு, சூடா ரெண்டு ஆமைவடை திம்போம்ல னு அவன் சொன்னதும் சரிதானு தோணுச்சி. மனோகர் ஹோட்டல் நல்ல பேமஸ் ஆனா கடை முதலாளி மனோகர் படு கஞ்சன். அங்க பில் போடுற பாவாடை எங்க கூட படிச்சவன்தான். அவன் சொல்லித்தான் தெரியும். ஹோட்டல்ல மிஞ்சுற சாப்பாடு எல்லாத்தையும் மீதி மிச்சம் இல்லாம அவர் வீட்டுல போய் கொடுத்தருனுமாம். கடை மாஸ்டர் முப்பிடாதிக்கு கைச்சுத்தம் கிடையாது..அப்பப்ப நீளும் அதுக்காக இப்படியா சாப்பாட்டை கூட வழிச்சி வீட்டுக்கு கொண்டு போறாரு. போகும் போது என்னத்தை கொண்டு போகப் போறாரு, தொண்டைக்கு கீழ நரகலுனு பேசுவான். நான் செல்வம் கடையில சைக்கிள போட்டுட்டுவரவும் மாரியப்னும் அங்கவந்தான். எங்கள பாத்ததும் பாவாடை “எலேய் திருவிழாக்கு கிளம்பிட்டீங்களானு"கேக க்குறதுலே தெரிஞ்சது தான் போக முடியலயே.இவனுக போறானுகளேனு ஏக்கப் பேச்சு. ஆமால, போயிட்டு கரகாட்டம்லாம் பாக்கனும்லானு மூணாந்திருவிழா ஷ்பெசல் கரகாட்டத்தை மாரியப்பன் நியாவப்படுத்தி பாவாடைய பெருமூச்சு விட வைச்சான். நல்ல மொறு மொறுனு ரெண்டு வடைய தின்னுட்டு பெருஞ்சீரகத்தை வாயிலே போட்டுக்கிட்டா வடைருசி நாசியிலே நிக்கும். சேச்காளியும் நானும் ரதவீதிக்கு போகும் போது இருட்டுகட்ட ஆரம்பிச்சிட்டு. MGR கூட போட்டோ எடுக்குறதுக்குஅம்புட்டு கூட்டம் முட்டா பயலுக, அட்டை செஞ்ச MGR பக்கத்துல நின்னு போட்டோ எடுக்குறதுல என்ன இருக்கோ! “எலேய் மாப்பிளை” னு தெரிஞ்ச சத்தம் திரும்பி பாத்தா சோலையப்பன். எங்க ஊருதான், ஆனாஇப்ப பக்கத்து ஊருக்கு மூட்டை முடிச்சோட காலி பண்ணிட்டு போயிட்டாங்க. அவன் அப்பா தாசில்தார் ஆபீசுல பியூன், எதோ பத்திரம் டாக்குமெண்டுக்கு பத்து ரூவா லஞ்சம் கேட்டதா சொல்லி சஸ்பெண்டு பண்ணிதுல ஊருல தலைகாட்ட முடியாம பக்கத்து ஊருக்கு போயிட்டாங்க. ஏ, சோலையப்பா பாடாவதி இங்க என்னல பண்ணிட்டு இருக்கனு நான் கேக்கவும், சத்தம் போடாம இங்க வானு சைகையில காட்டவும் புரிஞ்சுகிட்டேன்.ரஜினி கூட போட்டோ எடுக்க நின்ன கூட்டத்துல மாப்பிளை முன்னாடி நின்னுட்டு இரூந்தான்…அரவம் இல்லாம கூட போய் நின்னுகிட்டோம். இந்த போட்டோவ எங்க இளைஞர்நற்பணி மன்றத்தில எந்த இடத்துல மாட்டினா நல்லாயிருக்கும்னு ரோசனை வந்துட்டு. ஓருவழியா நடுசாமத்துல வில்லுப்பாட்டுமுடிஞ்சதும், செல்வம் கடையில போய் சாச்சிவவச்சிருக்கிற சைக்கிள எடுத்துட்டு போணும்..மாரியப்பனும் கூடவே வந்தான்..ஒன்னும் சொல்ல முடியல, டபுள்ஸ் போடனும்..அவன் கீழத்தெரு,,நான் மேலத்தெரு.வேற யாராது கீழத்தெருக்காரன் சைக்கிள்ல போனா, நீஅவன் கூடபோனு சொல்லி அனுப்பிடலாம் நினைச்சிகிட்டேபோய் பாத்தா விதி சதி செஞ்சமாதிரி சைக்கிள் காத்து இறங்கி கிடக்கு. மாரியப்பனை டபுள்ஸ் வைக்க இல்லை..நானே போகமுடியாது. நாலு பர்லாங் நடக்கனுமேனு, அதுவும் சைக்கிள உருட்டிக்கிட்டு போறதை நினைச்சாலே அசதி வந்துட்டு. அதுவும் ஞானயார் தோப்பு கல்லறை தோட்டத்தை தனியா தாண்டடி போகனுமேனுநினைச்சா லேசா பயம் வயித்தை கவ்வுசசு.
சைக்கிள் காத்திறங்கி கிடக்கிறதை பாத்ததும் மாரியப்பன், என்தோள்ல தட்டி” வா சேர்ந்து நடப்போம்னு" சொன்னதும் லேசாதெம்புவவந்தது. சைக்கிள செல்வம் கடையிலயே மறுடியும் சாத்திட்டு நடக்க ஆரம்பிச்சோம்.
வீடு போய் சேரும் போது சட்டைலாம் வேர்வை. அந்த மாதிரி நடை. சட்டைய கழட்டி கொடியில போட்டுட்டு படுக்கும் போது தோணிச்சி, புது வண்டினாலும் இனி மாரியப்பனை மட்டும் டபுள்ஸ் ஏத்திக்கலாம்னு. நல்லாருக்கும் போது கூட வறேனு சொல்லாதவன், பிரச்சனையப்ப கூட வந்தான். இனிமே அல்ப தனமா அவன்கிட்ட நடந்துக்கூடாதுனு ஞானோதயம் வந்துச்சு. இன்றைய சிந்தனை
Raj Uncle கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!
பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.
குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல.
எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது.
முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது.
தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது. அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது.
அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம்.
அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.
அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது.
அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது. குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது.
குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது.
மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது. இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது.
அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது. கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் . அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது.
பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது…
ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான்.
கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை.
கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும். தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து “நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்” என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.
ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. “நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது” என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம்.
ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை. ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை.
ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள்.
அதற்காக “நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட” என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.
இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது மிகவும் அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லைதான். ஆனால் ‘எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது’ என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.
வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே… அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான். அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான். ! சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம். ஆனால் … கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல. வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல. அது சாத்தியமும் அல்ல. கஷ்டம் காணாத மனிதர்கள் சாதித்ததாக வரலாறும் இல்லை.
அன்புடன் ஏ.சுந்தரராஜன் படித்ததில் பிடித்தது
Indira சாதிக்க முடியாத இலக்கை வாழ்க்கை கொடுக்கும்போது அழிக்கவே முடியாத தடயத்தை அந்த வாழ்க்கையில் பதியவைத்துவிட்டு செல்வது தான் திறமையின் சிறப்பு
ஆறுதல் ஏதுமின்றி அழுது முடித்த பின்பு வரும் நம்பிக்கைக்கு பலம் சற்று அதிகம் தான்
அடுத்த நொடி மறைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்களே இந்த வாழ்க்கை எந்த நிமிடமும் முடிந்து போகும் அது வரை அன்பை விதைத்து அறுவடை செய்
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத வலிகளை எல்லாம்,நம்மால் வெறுக்கவே முடியாத ஒருவரால்தான் கொடுத்திருக்கமுடியும்… திருநெல்வேலி வரலாறு:
Latha Kumar கி.பி.1790 செப்டம்பர் 1ல் இம்மாவட்டம் ஆங்கிலோயரால் உருவாக்கப்பட்டது. பிற்கால பாண்டியர்களின் தலைநகராகச் சிறிது காலம் இருந்தது.
வழிபாட்டு இடங்கள்:
திருக்குறுங்குடி,சங்கரன்கோவில்,அகஸ்தியர்அருவி,வானமாமலை கோவில்,சொரிமுத்தைய்யன் கோவில்,திருமலைக்கோவில்,நெல்லையப்பர்கோவில்,உவரி சுயம்பு லிங்கசுவாமி,பாளையங்கோட்டை ஊசிக்கோபுரம்,விஸ்வநாதர் கோவில்,குற்றாலநாதர் கோவில்.
பெயர்க்காரணம்:
இறைவனுடைய வழிபாட்டிற்க்காக உலர்த்திருந்த நெல்லை,ஊரெங்கும் மழை பொழிய நனையாமல் வேலியிட்டுக் காத்ததால் இப்பெயர் வந்தது.
நெல்லை தமிழ்:
தென்பாண்டி சீமை என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும்.[1] இவ்வழக்கை நெல்லை தமிழ் என்றும் அழைப்பர்.
தமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே நெல்லை தமிழ் தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது. பெரியோரை ‘அண்ணாச்சி’ என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.
சொற்கள்:
• அண்ணாச்சி - பெரியோர்களை மரியாதையாக அழைப்பது • ஆச்சி : வயதான பெண்மணி - Elderly Women;. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ‘பாட்டி’யை ஆச்சி என்று அழைப்பார்கள். . • பைதா - சக்கரம் ( wheel; In maths (English) pie x Dia(meter) is circumference!!) • கொண்டி - தாழ்ப்பாள் • பைய - மெதுவாக • சாரம் - லுங்கி • கோட்டி - மனநிலை சரியில்லாதவர். • வளவு - முடுக்கு,சந்து • வேசடை - தொந்தரவு • சிறை - தொந்தரவு • சேக்காளி - நண்பன் • தொரவா - சாவி • மச்சி - மாடி • கொடை - திருவிழா • கசம் - ஆழமான பகுதி • ஆக்கங்கெட்டது - not cconstructive (a bad omen) • துஷ்டி - எழவு (funeral) • சவுட்டு - குறைந்த • கிடா - பெரிய ஆடு (male) • செத்த நேரம் - கொஞ்ச நேரம் • குறுக்க சாய்த்தல் - படுத்தல் • பூடம் - பலி பீடம் • அந்தானி - அப்பொழுது • வாரியல் - துடைப்பம் • கூவை - ஆந்தை an owl (bird of bad omen) • இடும்பு - திமிறு (arrogance) • சீக்கு - நோய் • சீனி - சர்க்கரை (Sugar) • ஒரு மரக்கா வெதப்பாடு - சுமார் 8 செண்ட் நிலம் • நொம்பலம் - வலி • கொட்டாரம் - அரண்மனை • திட்டு - மேடு • சிரிப்பாணி - சிரிப்பு • திரியாவரம் - குசும்புத்தனம் • பாட்டம் - குத்தகை • பொறத்தால - பின்னாலே • மாப்பு - மன்னிப்பு • ராத்தல் - அரை கிலோ • சோலி – வேலை • சங்கு – கழுத்து • செவி – காது • மண்டை – தலை • செவிடு – கன்னம் • சாவி – மணியில்லாத நெல், பதர் • மூடு – மரத்து அடி • குறுக்கு – முதுகு • வெக்க - சூடு, அனல் காற்று • வேக்காடு - வியர்வை. தும்பி Vinoth: சிறிது விளக்கம் கொடுத்தால் விவாதிக்க பயனுள்ளதாய் இருக்கும் Vinoth: சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்த விழையாட்டு தும்பி பிடிப்பது. தட்டான் என்று நாங்கள் அழைப்போம். பட்டம் பூச்சி பிடிப்பதும் பட்டு பூச்சி பிடிப்பதும் கூட மிகவும் பிடித்த ஒரு பொழுது போக்கு.
இந்த முறை ஊர் சென்ற பொது பட்டு பூச்சிகளை தேடி பார்த்தேன் ஒன்று கூட கிடைக்க வில்லை. முற்றிலும் அழிந்து விட்டனனோ என்னவோ. மாறாக நிறைய மயில்களை பார்த்தேன். சிறு வயதில் மயில் பார்க்க ஒரே வழி சுவாமிமலை முருகன் கோவில்.
மயில்கள் அதிகமானதால் சில பயிர் வகைகளும் பூச்சிகளும், பாம்பினங்களும் பாதிக்கப்படுவதாக நண்பர்கள் விவாதிக்க கேட்டேன் Thamilvanan: I don’t know much about in historical I ll share here what I know.. Thamilvanan: ஆறு சிறிய கால்களையும் அழகிய சிறகையும் உடைய தும்பியிடம், வேழம் விளைந்திருக்கும் துறையை யுடைய ஊரன் அவன் என தன் கதையைக் கூறுகிறாள் தலைவி.
இனி எங்கேனும் தும்பி பட்டாம்பூச்சி போன்ற புள்ளினங்களைக் கண்டால் அஞ்சிறை என்ற சொல் நினைவுக்கு வருமல்லவா! Thamilvanan: தும்பி- கிட்டதட்ட 70 to 80 km speed தலைவன் travel pannuvar.. as per record, 14000 to 16000 km can travel in a year.. மனிதர்களைப் போல நீர் நிலைகளை ஒட்டியே வாழும்… மண்புழுவை போல இவனும் மணித இனத்திற்கு நண்பன் ஏனெனில் கொசு முதல் அனைத்து நச்சு பூச்சிகளை அழிப்பதில் வல்லவர்… புள்ளினங்களில் மிக முக்கியமானது.. அதனால் தான் தமிழில் தும்பி ( நம்பிக்கை) என்றனர்.. மூண்றாவது கை.. third view or third eye. That’s why Elephant has that name தும்பிக்கை… Shan: 👏👏👏. இந்த தும்பி வார்த்தை . ராஜா ஒர் அருமையான மலையாளப் பாடல் ஒன்றுக்கு இசைக்கோர்த்து இருப்பார். அதை ஞாபக படுத்திவிட்டது. “தும்பி வா தும்பக்குடத்தின் “என்று தொடங்கும். இன்று அவரின் பிறந்த நாள் கூட. வாழ்த்துவோம் அவரை இ ந் நாளில்!!! . இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசை சித்தரே! Vinoth: that is very famous song!!! Vinoth: even i cant understand it is great to listen. Shan: யாருக்கேனும் ஆர்வமும் நேரமும் இருந்தால் இன்று இரவு . இளையராஜவின் பாடல்களை நிகழ்கலை சந்திப்பில் அசைப் போடலாம்.. 😀 Thamilvanan: You are a good explorer ❤️ Vinoth: Sure, may be after 8:30. Illaraja iravugal we can meet. I have plan for website idea discussion to we can sandwich both of them. We design with Illayaraja 😎 Shan: கரும்பு திங்க எந்த நேரமும் நல்ல நேரம் தான்… Thamilvanan: Yep i ll also too join.. 😄 Shan: நம்ம நிதி அமைச்சரும் வரனும்.. அவரின் நீண்ட நாள் அவா.. Thamilvanan: எழுத்துக்கு உயிர் கொடுத்து விடுகிறிர்கள் நீங்கள் 👌👏 Swami: மறுபடியும் முதல்லஇருந்தா 🙄😜😁 Shan: மிக ரசனையான உரையாடல்.♥️♥️இன்று இசையால் 🎼🎹📀இணைந்த அனைத்து ராஜ ரசிகர்களுக்கும் நன்றி. 🙏🙏🙏மிக இசைவான சந்திப்பை ஏற்பாடு செய்த வினோத் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. ! ♥️🙏 Swami: நேற்று, என்னால் இணைய முடியவில்லை. அடுத்த வாரம் தாயகம் செல்லும் பயணம் உறுதிசெய்யப்பட்டதால் தலைக்கு மேல் வேலை வந்துவிட்டது.
குழு தலைப்பிற்கான வாக்கெடுப்பில் கிட்டத்தட்ட சமநிலையில் இருக்கிறது.
தொங்கு பாராளுமன்றம் மாதிரி இருக்கிறது.
முழம் தலைப் பூ வை வாங்கிவிடலாம் போல, குழுதலைப்பை முடிவு செய்யமுடியாது சுலபத்தில்…🤔 Shan: அடுத்த இசை சந்திப்பில் இணைந்துடுங்க.. நாம நாளை இரவுக்குள் உறுதி செய்துவிடுவோம்.. 👍👍ஒரு சில வேலைகளுக்கு பெயர் அவசியம் தேவைப் படுகிறது.. கழல்கள் சந்திப்பு இன்று திருமதி மது அவர்களின் அறிமுகத்துடன் உரையாடல் துவங்கியது. அவரின் அனுபவம் மற்றும் தமிழ் பற்று எங்களை மிரள்ச்சி அடைய செய்தாலும். அவரின் கனிவான சொல்லாடல் மிகவும் உற்சாகம் தருவதாய் இருந்தது. நம்மில் சிலர் கதை கேட்க பேரவா கொண்டிருப்பதை போல் அவர் கதை படைப்பது மற்றும் சொல்வதில் அனுபவம் மிக்கவர். அவரை குழுவில் இணைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். 🙏🙏🙏 பின் திரு சன்முகம் அவர்களின் வவ முன் எடுப்பை பற்றிய சிரிய உரை மற்றும் அவரின் கவிதை (இங்கு பதிவில் உள்ளது). வவ ———– வட்டார வழக்குகளை குரல் (ஒலி) வடிவில் தொகுக்கும் முயற்சி. மேலும் விவரங்களை தனியாக பின் ஒரு நாள் இணைக்கிறேன். குழுவின் துணை வலைத்தளம் பெயர் கழல்கள் (I will add 🌐 https://kazhalgal.silambu.us soon). 9 வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டது. திரு மெய்யப்பன் அவர்கள் நமது மாணவ செல்வங்களுக்கு எளிய கதைகளை தொகுத்து. ஒலி வடிவில் வழங்குமாறு கோரிக்கை வைத்தார். அதற்கு மது அவர்கள் உதவி செய்ய விருப்பம் தெரிவித்தார்.. இந்த குழுவில் இதுவரை செய்த சிந்தனைகளை (selected topics) இணையத்தில் தொகுக்க முன் எடுப்பகள் செய்ய முடுவு செய்யப்பட்டது.
பின்குறிப்பு: ☕🍪 இன்று வடை மற்றும் தேனீர் திருமதி கார்த்திகா அவர்களால் வழங்கப்பட்டது. ஆதியில் யானைகள் இருந்தன -நூல் விமர்சனம்
Latha Kumar உலகத்திலேயே ஒப்புமை கூற முடியாத ஒரு பெரிய விலங்கு யானை. சங்ககால இலக்கியம் முதல் சமகால இயற்கை வரை தவிர்க்க முடியாத ஒரு விலங்கினம் யானை என்பதை மிக விரிவாகவும் விளக்கமாகவும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிக எளிமையாக வாசிக்கும் விதத்தில் இந்தப் புத்தகத்தைப் படைத்திருக்கிறார் இயற்கை சூழலியலாளர், களப்பணியாளர், பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்ட ஆசிரியர் திரு. கோவை சதாசிவம் அவர்கள்.
‘காடு’ இதழில் முதலில் வெளிவந்து, பின் வாசகர்களின் வரவேற்பைப் பெற்று ‘ஆதியில் யானைகள் இருந்தன’ என்ற கட்டுரையின் முழு வடிவமே இந்தப் புத்தகம்.
இந்தப் புத்தகத்தில் யானையின் உணவாக இயற்கை அளித்த 82 வகைத் தாவரங்கள், 59 வகை மரங்கள். 23 வகை புற்கள் முளைக்கும் காடுகளை நாம் இன்று அறிவியல் என்ற பெயரிலும் மனித வளர்ச்சி என்ற பெயரிலும் அழித்து வரும் காடுகளைப் பற்றியும் அதனால் யானைகளுக்கு வரும் பேரிடர்களையும் விளக்கிக் கூறியிருப்பது நம்மை மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது.
பறவைகளின் வலசைப் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. நம்மில் எத்தனை பேர் யானைகளும் வலசை போகும் என்று அறிவோம்? அதேபோல் பறவைகள் தூது செல்வது பற்றி அறிவோம். யானை விடு தூது என்று ஒரு இலக்கியம் இருப்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? யானைகளின் உருவம் எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது அவைகளின் கருணையும் என்று என்றாவது அறிந்திருக்கிறோமா?
அதற்கு சிறந்த ஒரு உதாரணம் இது. அந்தப் பழங்குடிகளின் மலைக்கிராம வயல்களின் நடுவே அதிகாலை நேரத்தில் சிறிதும் பெரிதுமாக நான்கு யானைகள். அரை ஏக்கரில் விதைத்த பயிர்களை யானைகள் கால் மணி நேரத்தில் காணாமல் செய்து விடும்… என்ன ஆச்சரியம் பாருங்கள். அந்த பழங்குடி மக்கள் யானைகளிடம்
“என்ற வயிறு சிறுசு எங்காடும் சிறுசு உன்ற வயிறு பெருசு உன்ற காடும் பெருசு வாயே வச்சுடாதே சாமி வயலே விட்டுப் போயிரு "
என்று கெஞ்சிக் கேட்டதும், உடனே யானைகளும் தன் காதுகளை ஆட்டியாட்டி பழங்குடியினரின் வேண்டுகோளைக் கேட்டவிட்டு யானைகள் நின்று, நிதானித்து, சட்டென நகர்ந்து மறைந்தன. இப்படிச் சுவையான பல தகவல்கள் புத்தகம் முழுவதும் நிறைந்து நம்மை நெகிழ வைக்கிறது.
ஆதியில் யானைகள் இருந்தன என்பதை மாற்றி இனியும் அவை இருக்கும் என்று சொல்லும்படி நம்மாலான முயற்சிகளை செய்யத் தொடங்குவோம்.
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, யானைகள் இருந்தாலோ கோடானுகோடி நன்மை” என்பதை உலகம் உணரும் நாள் வர வேண்டும் என்பதை இந்தப் புத்தகத்தின் வாயிலாக உணர்த்துகிறார் ஆசிரியர்.
லதா குமார்
Latha Kumar: எனது இதயம் மிகவும் சிறியது அதை யாரும் கண்டதுகூட இல்லை இருந்தும் அதில் தான் எத்தனைத் துயரங்களை ஏற்றி வைக்கிறாய் இதோ பார் உன்னுடைய விழிகளும் சிறியதுதான் அது பெரும் உலகத்தையே தனக்குள் வைத்திருக்கிறதே என்றான்.
லதா குமார்.
Indhira: யானைகள் குழந்தைகளை போல சொன்ன சொல் கேட்டு வயலை விட்டு செல்வதாக குறிப்பிட்டது மனதை தொடும் நிகழ்வாக உள்ளது😍
Latha Kumar: இது உண்மை சம்பவம் என்று சொல்கிறார் ஆசிரியர்.
தேத்தாங்க்கொட்டையை
Shan: எங்க கிராமத்துல 80-90 கால கட்டத்துல கோடையில் ரொம்ப தண்ணி கஷ்டமா இருக்கும்.. அப்ப குளம் குட்டைல மழை பேஞ்ச தண்ணி கலங்களா கெடக்கும் . அதை தூக்கிட்டு வந்து இந்த தேத்தாங்க்கொட்டையை பானையில போட்டுடுவோம். அடுத்த நாளு தண்ணி சும்மா அப்படி சுத்தமாவும் சுவையாவும் இருக்கும். இப்ப எல்லாம் மினரல் வாட்டர் வண்டில கொண்டு வந்து குடம் 10 ரூ விக்கிறாங்க.. நாங்களும் அத வாங்குறோம்..
Indhira: தேற்றாங் கொட்டையின் ஆங்கில பெயர் என்ன ? Is is available everywhere?
Indhira: அத சொல்லுங்க .. கால போக்குல இந்த மாதிரியான விஷயம் எல்லாம் மறந்து மறைஞ்சு போயிடுமோன்னு கவலை வருது ..
Shan: நம்ம விக்கி இந்த மாதிரி சொல்லுது..https://en.m.wikipedia.org/wiki/Strychnos_potatorum
Latha Kumar: கடல் பயணம் செல்லும் போது அந்த உப்பு நீரை நன்னீராக்கவும் இதைத்தான் உபயோகித்தார்களா?
Latha Kumar: அருமையான பகிர்வுகள் 😀👏
Shan: இது உப்பு தண்ணிய நல்ல தண்ணியா மாத்தாது..
Gopikrishnan Venkatesan: அப்படி தான் ஒரிசா பாலு கூறுகிறார். இத்தோடு வேறு சில விதைகள் கொண்டு கடல் நீரை, குடி நீராக மாற்றி இருக்கிறார்கள்.
Gopikrishnan Venkatesan: https://youtu.be/EcEzGyMopXg
Shan: சிறப்பு!!. அவர் இதை எந்த தரவை வைத்து கூறுகின்றார் என்று தெரியவில்லை. அதற்கான குறிப்பை விளக்கி இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் நாமும் அறிந்து இருக்கலாம். தேற்றாங்கொட்டை என்பது மண் கலந்த மற்றும் கலங்கிய நீரை என்றே சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. தமிழரின் வரலாற்றை சங்க இலக்கியத்துடன் ஒப்பிட்டே அந்த கூற்றை நிறுவ முயல்கின்றோம். இன்னும் மேலதிக தரவுகள் இருந்தால் சிறப்பாக இருக்கும்!
Latha Kumar: இவர் கடல் ஆய்வாளர்.
நடனமும், சமையலும்!
Thamilvanan ‘வாவ்’ என்று நீங்கள் வியந்த நடனத்தை ஞாபகப்படுத்துங்கள்! மனமும், உடலும் ஒத்திசைந்து நிகழ்த்தும் அதிசயம் உங்கள் கண் முன் வரும்.
மனம் முழுவதும், உடலின் அசைவுகளில் லயித்தால், நடந்தால் கூட நடனமாகும். அதில் லயம் இருக்கும்.
சமையலும் அப்படித்தான். செய்யும் உணவில் உங்கள் மனம் லயித்தால், வெந்நீர் கூட அமிழ்தம் ஆகும். உங்கள் கை வித்தைகள் செய்கிறது என்று உண்பவர்கள் சொல்வார்கள்.
உடலசைவுகள், கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால், நடனம் சகிக்காது. உப்போ, காரமோ, இனிப்போ கூடினாலும், குறைந்தாலும், சமையல் சகிக்காது.
நடனத்தில் அசையும் உடலுடன், மனமும் அசைகிறது. சமையலில், பொங்கும் பாலுடன் மனமும் பொங்கி வழிகிறது.
அன்பு செய்யும் மனம் சொன்னதையெல்லாம் உடல் கேட்கிறது. அன்பு செய்யும் கைகள் சொன்னதையெல்லாம், உணவு கேட்கிறது.
ஆம், நடனத்தைப் போல, சமையலும் கலையே!
சிலம்பு முதல் ஆண்டு விழா Shan வணக்கம்!. நம் சிலம்பு பள்ளி மனதை மயக்கும் மழலை போன்று அழகாய் தவழ்ந்து , நிமிர்ந்து, நடந்து தனது முதல் ஆண்டு விழாவையும் மற்றும் முதல் பட்டமளிப்பு விழாவையும் இனிதே கொண்டாடி மகிழ்ந்தது. நம் குழந்தை செல்வங்களும் மகிழ்ச்சியுடன் தங்களது தமிழ் வகுப்புகளை நிறைவு செய்துள்ளார்கள். அவர்களுடைய கோடை விடுமுறையை பயனுள்ளதாக இருக்க நம் “சிலம்பின் கழல்கள்”மூலம் குறுகிய கால கோடை கால தமிழ் சிறப்பு வகுப்புகளை நிகழ் நிலை மூலம் நடத்தலாம். அது அவர்களுடைய தமிழ் கற்றலை தொடரச் செய்து மென்மேலும் சிறக்க உதவிடும்.
உதாரணமாக:-
- திருக்குறள் ( குறளும் விளக்கமும் கதைகளுடன்)
- தமிழ் சொற்கள் வினாடி வினா
- தமிழ் கையெழுத்துப் பயிற்சி
மேலும் நம்முடைய அணியின் அனைவரது கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றது.. விழையாட்டுக்கள் Shan நாம அந்த விளையாட்டுக்களை( tennis , football ) எவ்வளவு தூரம் திறம்பட நடத்த முடியும்னு தெரியல !?. மேலும் அதுக்கு பயிற்சியாளர்கள் , மைதானம் மற்றும் மேலதிக உபகரணங்கள் எல்லாம் வேணும்.
நான் யோசிப்பது அல்லது என் கருத்து. உபகரணங்கள் இல்லாத விளையாட்டு.. தொட்டு விளையாடும் முறை(tag game) .
உதாரணங்கள் ————————
- கோ-கோ
- ஒரு பந்தை மையத்தில் வைத்து ஒரு குழு பாதுகாக்க வேண்டும் மற்றொரு குழு எடுக்க முயலுதல்
- கண் கட்டி தொடுதல்( அணியினர் வழி நடத்தி)
- இது போன்று நாம் சிறுவயதில் விளையாண்ட விளையாட்டுக்களை கொஞ்சம் மேம்படுத்தி திறம்பட நடத்தலாம்
பயன்கள்:- ————-
- குழந்தைகள் ஓடி விளையாடும்
- குழு உணர்வுக்காண் புரிதல் ஏற்ப்படும்
- வெற்றி தோல்வி என்ற மன நிலை தாண்டி. மகிழ்ச்சியுடன் உடல் உறுதியை உறுதி செய்யும். அனைவரும் இணைந்து விளையாடும் தன்மை அதிகரிக்கும்
- கருவிகள் இல்லாமலே விளையடலாம் என்கிற எண்ணம் மேம்படும்
சவால்கள்:
- பெற்றோர்களின் ஆர்வம்
- குழந்தைகளுக்கு விளையாட்டின் தன்மையை புரிய வைத்தல்
- விளையாட்டை இந்த புவியியல் தன்மைக்கு ஏற்ப வடிவமைத்தல் Latha Kumar: பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்யலாம் என்று சொல்கிறார். சிறப்பு. 👌👍 போரும், போர் நிகழ்ச்சிகளும்…!
கரிகாலன் பகைவர் நாடுகளைக் கைப்பற்றினான், அவன் கைப்பற்றிய ஊர்களில் மதில்கள் அழிந்தன. கூகைகள் இருந்து குழறின என்று #பட்டினப்பாலை கூறுகின்றது.
படையெடுக்கும் அரசனைச் சேர்ந்த வீரர்கள் பகைவர் நாட்டு ஊர்களைக் கொளுத்துதல் வழக்கம்; கோட்டைகளை இடிப்பது வழக்கம்; இந்த அழிவுகளை எல்லாம் #புறநானூறு பாடல்களில் காணலாம்.
பிற்கால அழிவுகளைக் #கலிங்கத்துப்பரணி பாடல்களில் விரிவாகக் காணலாம். “நீ படையெடுத்தால் பகைவர் நாடு அழிவுறுமே” என்று புலவர்கள் வருந்திப் பாடிய பாடல்கள் பல. இத்தகைய பாடல்கள் #கொற்றவள்ளை என்று பெயர் பெறும்.
அரசனது தலைநகரில் கட்டடங்கள் இடிக்கப்படும்; அந்த நிலம் கழுதைகளால் உழப்படும்: கவடி விதைக்கப்படும். வென்ற அரசர், வெல்லப்பட்ட நாட்டுக் குளங்களில் தம் போர் யானைகளை நீராட்டுவர்; வென்ற நாட்டில் தங்கள் வெற்றித் தூண்களை நாட்டுவர் அல்லது தங்கள் இலச்சினையைப் பொறிப்பர்.
வென்ற அரசர், தோற்ற அரசர் குடியிலிருந்து தம் காலுக்குரிய கழலைச் செய்து கொள்வர். வீரகங்கணமும் செய்து கொள்வர். இவை சங்க நூல்களில் காணப்பெறும் செய்திகள். [6/17/23, 9:56:55 PM] Shan: #2வென்ற அரசன் போர்க்களத்தில் செய்யும் வேள்வி #களவேள்வி எனப்படும். வென்ற அரசன், தோற்ற அரசன் மனைவியருடைய தலைமயிரைக் கயிறாக்கி, அதனைத் தன் தேரை இழுக்கப் பயன்படுத்துவதும் உண்டு.
தோற்ற அரசனுடைய பற்களைக் கோட்டைக் கதவுகளில் பதிய வைத்தலும் உண்டு. வெற்றி பெற்ற மன்னருள் சிலர் இங்ஙனம் கீழ்த்தரமாக நடத்தலும் உண்டு. இவை பற்றிய விவரங்களைப் #புறநானூறு, #பத்துப்பாட்டு மற்றும் #பதிற்றுப்பத்து பாடல்களில் காணலாம்.
போர் வீரருட் சிலர் தமது தனிப்போர் முறையால் சிறப்புப் பெறுதலும் உண்டு. அத்தகைய வீரன் போரில் உயிர்விட்டால், அரசனும் பிறரும் அவன் நினைவாக #வீரக்கல் நட்டு வழிபாடு செய்வர். நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா ? - சென்னை வட்டார வழக்கு
’ பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைபடத்தில் சந்தானம் பேசிய “நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா ?” என்ற வசனம் இளைஞர்கள் மத்தியில் வைரலானது. தற்போது நாம் கூட பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவது உண்டு. அப்பாடக்கர் காமெடிக்காக சொல்கின்ற வார்த்தையல்ல. அப்படி ஒருவர் உண்மையிலேயே வாழ்ந்து வந்தார் என்றால் நம்ப முடிகிறதா?
’ அப்பாடக்கர் ’ வார்த்தை உருவான சுவாரசிய கதை இதோ…
அமிர்தலல் விதல்தாஸ் தக்கர் (Amritlal Vithaldas Thakkar) என்பவர் மிக பெரிய சமூக சீர்திருத்தவாதி. குஜராத்தில் பிறந்த இவர் ஹரிஜன மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர்.
சுதந்திரத்திற்கு முன்னால் மெட்ராஸ் மாகாணத்திலும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். இவரை மெட்ராஸ் மக்கள் பாசமாக தக்கர் பாபா என்று அழைத்தனர். (குஜராத்தியில் பாபா என்றால் அப்பா என்று பொருள்).
தக்கர் பாபா பல துறைகளில் சிறந்து விளங்கியவர். அவரிடம் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் சொல்வார்.
இதனால், நாளடைவில் மெட்ராஸ் மக்கள் யாரையும் “பெரிய அறிவாளியா?” என்று கேலியாக குறிப்பிட “பெரிய அப்பா தக்கரா ?” என்று கேட்கத் தொடங்கினர்.
பின்னாளில் அப்பா தக்கரா என்ற வார்த்தை மருவி அப்பாடக்கர் ஆகிவிட்டது.
*டாப்பு டக்கர்டா என்பது சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல வந்ததும் சென்னை வட்டார வழக்கின் மற்றொரு சொல்.
கூடுதல் தகவல்கள்:
தக்கர் பாபாவை கவுரவிக்க இந்திய அரசாங்கம் 1969 ஆம் ஆண்டு ஒரு தபால் தலையை வெளியிட்டது.
அமிர்தலால் விட்டல்தாசு தக்கர் ( 29 நவம்பர் 1869 - 20 சனவரி 1951)
ஆரம்ப கால வாழ்க்கை
இந்தியாவின் குஜராத் மாநில சௌராட்டிரா பகுதியில் உள்ள பவநகரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 1869 நவம்பர் 29 அன்று இவர் பிறந்தார். இவரது தந்தை விட்டல் தாசு தக்கர் இவருக்கு அம்ரித லால் என்று பெயரிட்டார்.
இவர் தனது தந்தையிடமிருந்து மனிதநேயத்திற்கான நன்மை மற்றும் சேவைக்காக தனது முதல் படிப்பைப் பெற்றார்.
இவர் 1890 இல் புனேவிலிருந்து தனது கட்டிடப் பொறியாளர் உரிமத்தைப் பெற்றார். இவர் போர்பந்தரில் ஒரு பொறியாளராக பணிபுரிந்தார். சில காலம் சாங்குலி மாவட்டத்தின் தலைமை பொறியாளராகவும் பணியாற்றினார்.
பின்னர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் முதல் ரயில் பாதையை அமைப்பதில் பணியாற்றுவதற்காகச் சென்றார். பின்னர் மும்பை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றினார். மும்பை நகரம் முழுவதுமுள்ள தூய்மைப்பணியாளர்களின் பரிதாப நிலைமைகளை முதன்முறையாக பார்த்தார். அவர்கள் வாழ்ந்துவரும் மோசமான காலனிகளைக் கண்டு இவர் அதிர்ச்சியடைந்தார். அன்றுமுதல் இந்த மக்களுக்கு உதவ தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க உறுதியான தீர்மானத்தை மேற்கொண்டார்.
பின்னர் சமூகப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். இவர் இந்திய சேவகர்கள் சங்கத்தில் உறுப்பினரானார். மேலும், தீண்டத்தகாதவர்கள் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை ஆதரித்தார்.
1932 இல் மகாத்மா காந்தி நிறுவிய அரிசன சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரானார்.
அக்டோபர் 24, 1948 - பாரதிய ஆதிம்ஜதி சேவை சங்கம் இவரது முயற்சியினால் நிறுவப்பட்டது.
இந்தியாவின் தொலைதூர இடங்களுக்கும்*, மிகவும் கடினமான பகுதிகளுக்கும் சென்று பழங்குடியினர், அரிசனர் ஆகியவர்களின் நிலைமை குறித்து விசாரணை நடத்தினார். அரசியலமைப்பின் செயல்பாட்டில் இவர் மதிப்புமிக்க உள்ளீடுகளைச் சேர்த்தார்.
தனது வாழ்க்கையின் 35 ஆண்டுகளை பழங்குடி மற்றும் அரிசன மக்களின் சேவையில் கழித்தார்.
- இவர் அசாம், கிராமப்புற வங்காளம், ஒடிசாவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள், குசராத்தில் பில் பகுதிகள், சௌராட்டிராவின் அரிசனப் பகுதிகள், மகாராட்டிராவின் மகர் பகுதிகள், சென்னையில் தலித்துகள், சோட்டா நாக்பூரின் மேட்டுநிலங்கள், தார்பார்க்கர் மாவட்டத்தின் பாலைவனம், இமயமலையின் அடிவாரங்கள், திருவிதாங்கூரின் கடலோரப் பகுதிகள் போன்ற இடங்களுக்கு பழங்குடி மற்றும் அரிசன மக்களின் மேம்பாட்டு நோக்கத்துடன் சென்றுள்ளார்.
மரியாதை
தக்கர் பாபா பெயரில் தக்கர் பாபா வித்யாலையா என்றொரு பள்ளியில் தி. நகரில் இன்றும் செயல்படுகிறது.
நன்கு அறியப்பட்ட ஒரு பகுதியான மும்பையில் உள்ள பாப்பா காலனிக்கு இவரது பெயரிடப்பட்டது.
ஏழை, பாதிக்கப்பட்ட மற்றும் முற்றிலும் பின்தங்கிய பழங்குடி சமூகத்திற்கு அர்ப்பணிப்பு சேவைகளுக்காக மத்தியப் பிரதேச மாநில அரசு இவரது நினைவாக ஒரு விருதை நிறுவியுள்ளது.
மகாராஷ்ட்ர அரசு 2007 ஆம் ஆண்டில் தக்கர் பாப்பா ஆதிவாசி வஸ்தி சுதாரனா என்ற ஆதிவாசி கிராமங்களையும் காலனிகளையும் மேம்படுத்தும் திட்டத்தை வகுத்துள்ளது.
தொகுப்பு : லதா குமார் 6/20/2023
நாகர்கோவிலிலிருந்து to மெளன்டன்வியூ
Raj Uncle நாகர்கோவிலிலிருந்து மெளன்டன்வியூ வந்து இன்றைக்கு இரண்டு மாதமாகிறது. ஆனால், இருபது வருடங்கள் ஆனதுபோல் மன இறுக்கம். அறுபதே நாளில் எப்படித் தலைகீழாக என் வாழ்க்கை மாறிவிட்டது?
பிறந்தது முதல் அறுபத்தைந்து வருடங்கள் நாகர்கோவில் ஒழுகினசேரி கிராமத்தில். காலை எழுந்திருப்பது, பழையாற்றில் குளியல், சேது லட்சுமிபாய் பள்ளிக்கூடத்தில் படிப்பு, லாலாக்கடை அல்வா, சங்கர அய்யர் ஹோட்டல் ரசவடை, லட்சுமி தியேட்டர் தரை டிக்கெட் சினிமா என்று சிறுவயது வாழ்க்கை. அப்புறம் மணிமேடை ஜங்ஷனில் இருக்கும் போஸ்ட் ஆஃபீசில் கிளார்க் வேலை. மாமா மகள் சரோஜாவோடு கல்யாணம். கறிவேப்பிலைக் கொழுந்தாக மகன் மணி. படிப்பில் படு சுட்டி. சென்னை ஐ.ஐ.டி.யில் எஞ்சினீயரிங் படித்தான். அமெரிக்காவில் மேற்படிப்பு. அங்கேயே தங்கிவிட்டான். தங்கமான பையன். நாங்கள் பார்த்துவைத்த தூரத்து சொந்தக்காரப் பெண் கலாவோடு திருமணம். இரண்டு பேரும் கூகிள் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். ஆதித் என்று நான்கு வயது மகன், இரண்டு வயது மகள் ஆத்யா. இருவரும் டே கேர் போகிறார்கள்.
மணி குடும்பத்தோடு வருடாவருடம் எங்களைப் பார்க்க வருவான். ஒவ்வொரு தடவையும், அவனும், கலாவும் அமெரிக்காவுக்கு வரும்படி சொல்லுவார்கள். சரோஜா அழகாகப் பதில் சொல்லுவாள், “நீங்க செடியாக இருக்கறப்ப அமெரிக்கா போய்ட்டீங்க. அங்கே வேரூன்ற முடிஞ்சுது. நாங்க மரம்டா, அறுபது வயசு மரம். எங்களைப் பிடுங்கி நடாதே. இந்த ஊரைவிட்டு எங்களால் வரவே முடியாது.”
மகராசி, சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற அவளால் முடிந்தது. இந்த வருஷம், அவளுக்கு அறுபது வயசுப் பிறந்த நாள். நாகராஜா கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டுத் திரும்பினோம். அசதியாக இருக்கிறது என்று படுத்தாள். நெஞ்சு வலித்தது. என் மடியில் படுத்துக்கொண்டே போய்விட்டாள். “நாம் யாருக்குமே கெடுதல் நெனைச்சது கிடையாது. அதனால், நமக்கு அநாயச மரணம்தான் வரும் உங்களுக்கு அப்புறம்தான் நான் போகணும். ஏன் தெரியுமா? காப்பிகூட உங்களுக்குப் போடத் தெரியாது, திண்டாடித் திணறிடுவீங்க” என்று அடிக்கடி சொல்லுவாள். அவள் பாதிப் பிரார்த்தனை பலித்துவிட்டது. அநாயசமாகப் போய்விட்டாள். நான் மாட்டிக்கொண்டேன்.
மணி வந்தான். காரியங்கள் முடிந்தன.
“அப்பா, நீங்க எங்களோட அமெரிக்கா வர்றீங்க.”
“நான் பக்கத்துத் திருவனந்தபுரம் தவிர, தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கேயும் போனதே கிடையாதே? எப்படிடா வருவேன்? என்னை விட்டுடு.”
“உங்களைத் தனியா விட்டுப் போகமாட்டேன். நீங்க வந்தே ஆகணும்.”
“ரெண்டு நாள் தா. ஆலோசிச்சுச் சொல்றேன்.”
பால்ய சிநேகிதன் ஹரியோடு பேசினேன். அவன் சொன்னான், “நம்ம ஊர்ல என்னடா இருக்கு? நம்ம வயசுக்காரங்கள்லே நாமும், சாமிநாதனும்தான் மிச்சம். இந்தக் காலத்துல பசங்க அப்பா, அம்மாவை வெச்சுக் காப்பாத்தறதே ஆச்சரியம். உனக்கு, மகன், மருமகள் ரெண்டு பேருமே பிரியமாக் கூப்பிடறாங்க. தயங்காமப் போயிடு.”
மணிக்கும், கலாவுக்கும் ஒரே சந்தோஷம். “யூ ஆர் கமிங் வித் அஸ் தாத்தா” என்று ஆதித் கட்டிக்கொண்டான். என்னவென்றே புரியாமல் குழந்தை ஆத்யாவும் Huggy தந்தாள்.
ஆமாம், அறுபத்து ஐந்து வயது மரம், தன் வேர்களைப் பெயர்த்துக்கொண்டு அமெரிக்காவில் வேரூன்ற முடிவெடுத்துவிட்டது. ஹரி, பழையாறு, நாகராஜா கோவில், மணிமேடை ஜங்ஷன் எல்லாத்துக்கும் டாட்டா சொன்னேன். நாகர்கோவிலுக்குத் திரும்பிவருவேன் என்று எனக்கு நம்பிக்கையில்லை.
அமெரிக்கா வந்துவிட்டேன். மணியும், கலாவும் எனக்காக லீவு எடுத்திருந்தார்கள். ஆதித், ஆத்யா டே கேர் போகவில்லை. நாள் முழுக்க அரட்டை, குழந்தைகளோடு விளையாட்டு. பெரிய வீடு. சுற்றிலும், சிகப்பு, வெள்ளை, மஞ்சள் எனப் பூத்துக் குலுங்கும் ரோஜாக்கள். ஒவ்வொரு பூவும் பெரிசு பெரிசாய்… நாகர்கோவில் கலைவாணர் பூங்காவில்கூட இத்தனை தினுசு இத்தனை பெரிசு கிடையாது. வீட்டின் பின்புறம், பிள்ளைத்தாய்ச்சி போல் ஆரஞ்சு, ஆப்பிள் மரங்கள். ரோஜாக்களைத் தொட்டுத் தடவுவேன். ஆப்பிளை மரத்திலிருந்து பறித்துச் சாப்பிடுவேன். அனுபவம் புதுமை. அமெரிக்கா சொர்க்கமாக இருந்தது.
இரண்டு வாரங்கள் ஓடின. மணி சொன்னான், “அப்பா, நாளை முதல் நானும், கலாவும் ஆபீஸ் போகணும். ஆதித், ஆத்யாவுக்கும் கிரெஷ் ஸ்டார்ட்டிங்.”
மறுநாள் காலை. ஆறு மணிக்கே வீடு அல்லோல கல்லோலப்பட்டது. பச்சைக் குழந்தைகளை அரைத் தூக்கத்தில் எழுப்பினார்கள். ஏழரை மணிக்கு எல்லோரும் ரெடி. காலையில் மணி குழந்தைகளை டே கேரில் விடுவானாம், மாலை ஆறு மணிக்குக் கலா கூட்டிக்கொண்டு வருவாளாம். இப்படிப் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளும் ஏற்பாடு.
புறப்படும்போது மணி சொன்னான், “அப்பா, இந்த ஏரியா பத்திரமானதுதான். ஆனால், நாம் ஜாக்கிரதையா இருக்கணும்.”
“அப்படீன்னா…!”
“யாராவது கதவைத் தட்டினா திறக்காதீங்க. நான் சன் டிவி, ஜெயா டிவி, ஹீரோ டாக்கீஸ் கனெக்ஷன் எல்லாம் வாங்கியிருக்கேன்.”
எப்படி டி.வி. போடுவது, சினிமா பார்ப்பது என்றெல்லாம் விளக்கினான். கொஞ்ச நேரத்தில் எல்லோரும் போய்விட்டார்கள். நான் மட்டும் தனியாய். ஒரே நிசப்தம். என்னை அறியாமலே மனம்முழுக்கப் பயம். வாழ்க்கையில் இத்தனை நிசப்தத்தை நான் அனுபவித்ததே கிடையாது. ஒழுகினசேரியில், குழந்தைகள் விளையாட்டு, அக்கம் பக்கப் பெண்களின் அரட்டை, ஆண்களின் அரசியல் விவாதங்கள், டிவி அலறல் என்று கிராமமே அதிரும். ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். ரோட்டில் கார்கள்கூட அதிகம் காணவில்லை. மனிதர்களே இல்லாத அத்துவானக் காட்டில் என்னை யாரோ விட்டுப்போனதுபோல் வெறுமை.
வயிறு பசித்தது. டேபிள்மேல் காலைக்கு இட்டிலி, மதிய உணவு, ஃபிளாஸ்க் நிறையக் காப்பி. மருமகள் கலா அன்போடு சமைத்துவைத்துப் போயிருந்தாள். எனக்கு ஒரு குணம். தானாகவே எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடுவது நான் வெறுக்கும் சமாச்சாரம். இதற்கு முக்கிய காரணம் என் தர்மபத்தினி சரோஜாதான். கல்யாணம் ஆகும்வரை அம்மா பரிமாறுவாள். அப்புறம் அத்தனை நாளும் சரோஜாதான். சில கல்யாணங்களில் பஃபே விருந்து இருக்கும். அங்கேயெல்லாம் சரோஜாவே தட்டில் போட்டு எனக்குத் தந்துவிடுவாள்.
இட்டிலி சாப்பிடத் தொடங்கினேன். நானே எடுத்துச் சாப்பிடும்போது, ஒவ்வொரு விள்ளலும் தொண்டைக்குக் கீழ் இறங்க மறுத்தது. டிவி போட்டேன். அதுவும் போரடித்தது. படுத்தேன். என்னை அறியாமலே தூங்கிவிட்டேன். மதியம். கடனே என்று சாப்பாடு.
சாயந்தரம் வந்த கலா பதறிவிட்டாள்.
“மாமா, நீங்க சாப்பிடவேயில்லையே? உப்பு, காரம் ஏதாவது அதிகமாகப் போட்டுட்டேனா? உங்க உடம்பு சரியா இருக்கில்ல?”
“இல்லம்மா. உன் சமையல் சூப்பர். என் உடம்பும் நல்லாத்தான் இருக்குது. ஏதோ ஊர் நினைப்பு.”
கலா அப்புறம் மணியோடு வந்து பேசினாள்.
“உங்களுக்கு போரடிக்குதுன்னு நினைக்கிறேன். ஸில்வன் பார்க் பக்கத்தில்தான் இருக்குது. நடக்கிற தூரம்தான். இந்தச் சனி, ஞாயிறு உங்களைக் கூட்டிட்டுப் போய்க் காட்டறேன். நீங்க தினமும் சாயந்தரம் போகலாம்.”
சனி, ஞாயிறு போனேன். நிறைய இந்தியக் குடும்பங்கள். ஆதித், ஆத்யாவோடு பந்தைத் தூக்கிப்போட்டு விளையாடினேன். ஜாலியான நேரங்கள்.
தினமும் ஸில்வன் பார்க் போகத் தொடங்கினேன். ஒரே ஒரு பிரச்சனை. வீட்டைப் பூட்டினோமா என்று சந்தேகம். இழுத்து, இழுத்துப் பார்ப்பேன். சாவியைப் பத்திரமாக வைத்துக்கொண்டிருக்கிறோமா என்று மனசு வேகமாக லப், டப் அடிக்கும். அடிக்கடி சட்டைப் பாக்கெட்டைச் செக் பண்ணிக்கொள்வேன். சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் டென்ஷன், டென்ஷன்.
அமெரிக்காவில் காலெடுத்து வைத்தாலே வாழ்க்கை எந்திரகதி ஆகிவிடும் போலிருக்கிறது. திங்கள் டு வெள்ளி டிவி, ஸில்வன் பார்க்: சனி, ஞாயிறு சன்னிவேல் கோவில், காஸ்ட்கோ போய் மளிகைச் சாமான்கள், நம்மூர் ஹோட்டலில் சாப்பாடு.
இரண்டு மாதத்தில் அமெரிக்கா வெறுத்துவிட்டது. அதிலும், ஸில்வன் பார்க்கில் பெரும்பாலும் வருபவர்கள் இந்தி, தெலுங்குக்காரர்கள். ஆங்கிலம் தெரிந்தாலும், இந்தி, தெலுங்கு பேசினார்கள். எனக்கு இரண்டுமே சுட்டுப்போட்டாலும் புரியாது, வராது. ஒரு வயதான தமிழ்த் தம்பதியைப் பார்த்தேன். சிரித்தேன். பதிலுக்குச் சிரித்தார்கள். ஹலோ சொன்னேன். ஹலோ சொன்னார்கள். அப்புறம், நான் பக்கத்தில் நிற்பதையே மறந்துவிட்டு, அவர்களுக்குள் பேசத் தொடங்கினார்கள். நான் நகர்ந்தேன். பார்க் கிரவுண்டில் நான் போகும்போதெல்லாம் சின்னப் பையன்கள் ஸாக்கர் விளையாடுகிறார்கள். அதைப் பார்ப்பதுதான் என் பொழுதுபோக்கு. அதேநேரம், மனக்குரங்கு எங்கெங்கோ அலைபாயும். வேலை வெட்டி இல்லாத மூளை சாத்தானின் கூடாரமாகும். அமெரிக்கா வந்ததே தப்போ, நாகர்கோவிலிலேயே இருந்திருக்கலாமோ, மணியும், கலாவும் என்னைக் கூட்டிக்கொண்டு வந்தது உண்மையாகவே என்மீது இருக்கும் பாசத்தாலா, அல்லது ஆதித், ஆத்யாவுக்கு விளையாட்டுப் பொம்மையாகவா? இப்படி நினைத்த சில நிமிடங்களிலேயே, இப்படிக் கீழ்த்தரமாகச் சிந்திக்கிறோமே என்று என்னையே திட்டிக்கொள்வேன்.
ஒரு வாரமாக ஒரு புதுப்பையன் வருகிறான். ஒன்பது, பத்து வயசு இருக்கலாம். பளிச் முகம். சூம்பிப்போன கால்கள். போலியோ பாதிப்பு. ஊன்றுகோல்களோடு மெள்ள நடந்து வருவான். உடையைப் பார்த்தால், அதிகம் வசதி உள்ளவனாகத் தெரியவில்லை. ஸாக்கர் மைதானம் அருகே ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருப்பான். தன்னால் விளையாட முடியவில்லையே என்னும் சோகம் அவனுக்குள் நிச்சயம் இருக்கவேண்டும். அடிக்கடி என்னைத் திரும்பிப் பார்ப்பான். ஆனால், ஏதோ தயக்கம் தெரியும். என்னிடம் பண உதவி எதிர்பார்க்கிறானோ? எதற்கும், கவனமாக இருப்பது நல்லது.
இன்று அந்தப் பையன் என்னருகே வந்தான்.
“தாத்தா, நீங்க தமிழா?”
“ஆமாம். ஏன்? நீ தமிழா?”
“ஆமாம். நான் உங்க பக்கத்திலே உட்காரலாமா? உங்ககூடக் கொஞ்சம் பேசணும்.”
என் மனக்குறளி சொன்னது, “இந்தப் பயல் டாலர்தான் கேட்கப் போறான்.”
“தாத்தா, என் பேரு கண்ணன். எங்க ஊரு தர்மபுரி.”
“சேலம் பக்கத்தில் இருக்கிற ஊர்தானே?”
“ஆமாம். எங்க அப்பா ரொம்பக் குடிப்பாரு. என் மூணு வயசுலேயே இறந்து போயிட்டாரு. அம்மாதான் என்னை வளத்தாங்க. போன வருஷம், ஒரு கார் விபத்தில் அவங்க உயிர் போயிடிச்சு. ராமகிருஷ்ண மடம் சாமிகள் என்னைக் கூட்டிட்டுப் போய்ப் படிக்கவெச்சாங்க. அங்கே சாமிக்குத் தெரிஞ்ச ஒரு அம்மா வந்தாங்க. அரசாங்க அனுமதி வாங்கி என்னைக் கூட்டிட்டு வந்திருக்காங்க. நல்லாப் பாத்துக்கறாங்க. வீட்டிலே இங்கிலீஷ் சொல்லித் தர்றாங்க. சீக்கிரமே ஸ்கூல்லே சேப்பாங்க. நான் நல்லாப் படிச்சுப் பெரிய ஆளா வருவேன்.”
“ஆசீர்வாதம் தம்பி.”
“நன்றி தாத்தா. எனக்கு உங்ககிட்டே ஒண்ணு கேக்கணும். தப்பா நினைக்க மாட்டிங்களே?”
ஒருவழியாப் பயல் பணந்தான் கேட்கப் போறான்.
“சொல்லுப்பா.”
“நீங்க எப்பவும் ஏன் சோகமா உட்கார்ந்திருக்கீங்க?”
“ஏதோ நெனைப்புகள் தம்பி.”
“தாத்தா. நான் அநாதை. கால் நடக்கமுடியாது. ஆனால், ராமகிருஷ்ண மடம் சாமியார் என்னைக் கிராமத்திலிருந்து கூட்டிட்டுப் போனது என் அதிர்ஷ்டம். சாந்தி அம்மா அமெரிக்காவுக்கு அழைச்சு வந்தது என் அதிர்ஷ்டம். இதை நெனச்சு, நெனச்சு, நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?”
“நெஜமாவா? எப்படிடா?”
அந்தப் பொடியன் என் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான். அவனை, என்னிடம் காசுக்குக் கையேந்தி வருகிறவனா நெனைச்ச நானெல்லாம் ஒரு மனுஷனா!
“ராமகிருஷ்ண மடம் சுவாமிஜி எனக்கு ஒரு கதை சொன்னார். மனசுலே வருத்தம் வர்றப்போ எல்லாம், அந்தக் கதையை நினைவுபடுத்திக்கச் சொன்னார்.”
“என்னப்பா கதை அது?”
“ரொம்ப நாள் முன்னாடி, ஒரு ராஜா இருந்தார். அவருக்குத் தீராத தலைவலி. வைத்தியர்கள் வகை வகையா மருந்து கொடுத்தும் குணமாகலே. ஒரு ஜோசியர் வந்தார். ராஜா பச்சை நிறத்தை மட்டும் பாத்துக்கிட்டேயிருந்தா தலைவலி போயிடும்ன்னு சொன்னார். நாடு முழுக்கப் பச்சைப் பெயிண்ட் அடிச்சாங்க. நாட்டில் எல்லோரும் பச்சை டிரெஸ் மட்டுமே போடலாம்னு கட்டளையிட்டாங்க. ஆனா, குதிரை யானை, வானம் நிறங்களை மாற்ற முடியுமா? இவற்றை ராஜா சிலசமயம் பார்த்துவிடுவார். தலைவலியால் துடிப்பார். ராஜாவுக்குத் தெனாலிராமன் மாதிரி ஒரு விகடகவி. ஒரு சுலபவழி சொன்னார், நீங்க பச்சைநிறக் கண்ணாடி அணியுங்க. அப்புறம் நீங்க எதைப் பாத்தாலும், தலைவலி வராது. ராஜா அதைப் பின்பற்றினார். அவர் தலைவலி போயே போச்.”
நான் பிரமிப்பில். சந்தோஷம் வெளியில் இருந்து வருவதில்லை. நமக்குள்தான் இருக்கிறது. நம் அணுகுமுறையை மாற்றிக்கொண்டால், இனியெல்லாம் சுகமே என்னும் தத்துவம் இந்தக் குட்டிக்கதைக்குள்ளா?
“தாத்தா. லேட் ஆகுது. சாந்தி அம்மா தேடுவாங்க. வீட்டுக்குப் போறேன். நாளைக்குக் கட்டாயம் உங்க கதையைச் சொல்லுங்க.”
ஊன்றுகோல்களின் டொக் டொக் சப்தம். திரும்பிப் பார்த்துக்கொண்டே போகிறான். எனக்குள் பிரம்மாண்டக் கேள்வி - இவன், வெறும் தர்மபுரிக் கண்ணனா, அல்லது கீதோபதேசக்காரரின் மறுபிறவியா?
வீட்டுக்கு வருகிறேன். என் நடையில் என்னை அறியாமலே, ஒரு துள்ளல். மணி வந்தவுடன், கலா அவனிடம் மெள்ளச் சொல்கிறாள், “ரொம்ப நாளைக்கு அப்புறம், மாமா இன்றைக்குச் சந்தோஷமா இருக்கார்.”
நான் மகனிடம் போகிறேன்.
“மணி, பொழுதை வீணாக் கழிக்க எனக்குப் பிடிக்கலே. எங்கேயாவது பார்ட் டைம் வாலன்டியரா ஒர்க் பண்ண முடியுமா?”
“என் ஃபிரண்ட் முகுந்த் நிறைய சோஷியல் ஒர்க் பண்றான். அவன்கிட்டே சொன்னா, உடனே ஏற்பாடு பண்ணுவான். அது சரி, திடீர்னு ஏன் உங்களுக்கு இந்த யோசனை?”
சத்தியமான பதில் என்னை அறியாமலே வரத் துடிக்கிறது, ‘நான் கண்ணாடியை மாத்திட்டேன்!’
இதைச் சொன்னால் மணிக்குப் புரியாது. வெளியே வரத்துடிக்கும் வார்த்தைகளை விழுங்குகிறேன். சிரிக்கிறேன். அப்பனுக்கும், மகனுக்குமிடையே புன்முறுவல்கள் ஆயிரமாயிரம் சேதிகள் சொல்லும்…
தமிழ் எனும் அமுது :
Latha Kumar காய்கறிக்கடை ஒன்றில்….
“கிள்ளிப் பார்க்காதீர் கிழங்கை” என்றாள்..!
“அப்படியொன்றும்
வயதாகி விடவில்லை..
என் கை இளங்கைதான்” என்றேன்..
அவள் முறைப்புக்கு இடையே
“என்ன இது, கொத்து மல்லி வாசமே இல்லை?” என்றேன்…
“ம்…இது காலை நேரம்
அதனால் பூக்க வில்லை "
எனச் சிரித்தாள்.
ஆனால் அந்தச் சிரிப்பில்
அதிகாலையிலே அழகாய்
மல்லி பூத்திருந்தது.
சித்தம் சூடேற்றும் அவள்
கண்களைப் பார்த்துக் கொண்டே…
“முத்தம் தரும் காய் உண்டோ…?”
என்றேன்…
“என்ன என்ன” என்று அதட்டினாள்…
“முத்துக்கள் ஒளிந்திருக்கும்
வெண்டைக் காயைச் சொன்னேன்”
என்றேன்…
“வெண்டையில்லை
வெட்டும் காயிருக்கிறது
வேண்டுமா? " என்றாள்.
“ஐயய்யோ அப்படியென்ன காய்?” என்றேன்.
“கத்தரிக்காய்” என்றாள்.
“மழைபொழியும் காயுண்டோ?”
என்று மடக்கினேன்.
“புரியவில்லை” என்றாள்.
“காரம் (கார் அம்) பொழியும் காய்” என்றேன்.
“ஓ.. அடையெடுத்த பெயரோடு
அதைத் தடுக்கும் காயாக வந்துள்ளது” என்றாள்.
இப்போது நான் விழித்தேன்.
“ஆமாம், குடை மிளகாய்” என்றாள்.
“இப்படித்தான் போனவாரம்
தித்திக்கப் பேசித் தேன்காய் என்று தேங்காய் விற்றாய். வீட்டில் சென்று உடைத்துப் பார்த்தேன், ஒரே வழுக்கை” என்றேன்..
“இல்லை இல்லை குடுமியோடுதான் தந்தேன்
பொய்சொல்லாதீர்” என்றாள்.
“ஆசையொடு ஆயிரங்காய் தின்றாலும் மூக்கின் கீழ் மீசை வைத்த காயுண்டே, விலையென்ன?” என்றேன்.
சிறிதுநேர யோசனைக்குப்பின்
சிறு காயப் படுத்தும் சிரிப்போடு…
“வெங்காயமா…? விலை நூறு” என்றாள்.
விலையைக் கேட்டுப் பெருங்காயப் பட்டுப்போனேன்.
“உன் உள்ளக்காய் போலும்
உள்ளே ஒளித்துவைக்கும்..
அந்தக் காய் கிடைக்குமோ?” என்றேன்.
“அட, கள்ளக்காயைக் (கடலைக்காய்) கேட்டேன்” என்றேன்.
“அதான..” எனச் சிரித்தாள்.
“இனிக்கும் காயேதும்
உண்டா?” என்றேன்.
“சுண்டைக்காயும், பாகற்காயும் உள்ளது” என்றாள்.
“ஆமாமாம், நீ கையோடு அள்ளித் தந்தால் இனிக்காமல் என்ன செய்யும்?” என்றேன்.
“தக்காளி என்ன உன்னைப் போலவே அரைவெட்டாக இருக்கிறதே?” என்றேன்.
கண்கள் சிவக்க அவள்
காளியாவதைக் கவனித்தேன்.
“சண்டையை முடித்துக் கொள்வோம், காயா பழமா?” என்றேன்.
“பழம்” என்றாள்.
நான் கொஞ்சம் கொஞ்சமாகக்
கனிந்து கொண்டிருந்தேன்…
- அழகான சிலேடை நயம் பொருந்திய இந்த உரையாடலை எழுதியவர் யாரெனத் தெரியவில்லை. 🍁🪷👏🍁🪷👏🍁🪷👏 தி.ஜானகிராமன், (1921/1982) தஞ்சைத் தரணியின் மைந்தன் . புதின எழுத்தாளர் , ஒலிபரப்பாளர், சாகித்திய விருதாளர்.
அத்தகைய பல புதினங்கள், சிறுகதைகள் பலப்பல படைத்தவர் ! அவற்றுள் மிகப் பரவலாக விமரிசக் கப்பட்டவை மூன்று புதினங்கள் !
- அம்மா வந்தாள்,
- மோகமுள் (இது திரைப்படமாகவும் வந்தது)
- மரப்பசு
இந்த மூன்று புதினங்களிலும் மிகவும் போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் இலக்கான புதினம் " #அம்மா_வந்தாள் "
அந்த அம்மா வந்தாள் புதினத்தின் கதைச் சுருக்கத்தை . உங்கள் பார்வைக்குத் தருகிறேன் !
அம்மா வந்தாள் (Amma Vandhaal) என்கிற தமிழ்ப் புதினம் தி.ஜானகிராமன் (தி.ஜா.) அவர்களால் எழுதப்பெற்று ஐம்பத்தாறு (57) ஆண்டுகளுக்கு முன்னால் 1966ல் வெளிவந்த ஒரு இலக்கியப் படைப்பாகும்.
இந்தப் புதினம் அவர் எழுதிய புதினங்களுள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இப்புதினம், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, புகழ் பெற்ற “இல்லுஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா ( Illustrated Weekly of India) எனும் ஆங்கில வார இதழில் வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது !
அம்மா வந்தாள் கதைச் சுருக்கம் :
சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பு வேதம் படிப்பதற்காக வெளியூரில் உள்ள மடத்திற்கு அனுப்பபடுகிறான்.
அங்கே பதினாறு ஆண்டுகள் வேதம் படித்தபின்னர் தன்னுடைய சொந்த ஊருக்குப் புறப்படத்தயாராகிறான்.
இன்னும் சில நாட்களில் கிளம்ப வேண்டும் என்ற நிலையில், அம்மடத்தினை நிர்வகிக்கும் பவானியம்மாளின் தம்பி மகள் “இந்து”…… தான் அப்புவை விரும்புவதாகக் கூறுகிறாள்.
இந்து ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவள். தன் அத்தை பவானியம்மாளோடு வசிக்கிறாள். அவள் சிறுவயதிலிருந்தே அப்புவுடன் வளர்ந்தவள். அதனால் அவளுக்கு அப்புவின் மீது தீராக்காதல்.
தான் ஏற்கனவே மணமாகியவளாய் இருந்தாலும் அனைத்து நாட்களிலும் அப்புவையே நினைத்துக்கொண்டிருந்ததாக கூறுகிறாள்.
ஆனால் ஏற்கனவே திருமணமாகி விதவையானவளை மணப்பது பாவம்,அது பவானியம்மாவுக்கும், தன்னை நம்பி அனுப்பிய தன்னுடைய #அம்மா #அலங்காரத்திற்கும் செய்யும் துரோகம் எனக் கூறி அப்பு, இந்துவை ஏற்க மறுத்துவிடுகிறான்.
அதனால் கோபமடைந்த இந்து, அப்புவிடம்: … “அவனுடைய அம்மாவின் நடத்தை சரியில்லை” எனவும், “அவள் வேறொருவரோடு உறவு வைத்துள்ளதாகவும்” கூறுகிறாள். அதனால் கோபமடையும் அப்பு பின்னர் சென்னைக்கு சென்று அங்கு அவனுடன் பிறந்தவர்கள் ஏழு பேர், அம்மா, அப்பா ஆகியோருடன் வழ விரும்புகிறான்.
பதினாறு வருடம் கழித்து வரும் அப்பு சில நாட்களிலேயே உண்மையை அறிந்து கொள்கிறான்.
ஆம் இந்து கூறியது உண்மைதான். அப்புகுடும்பத்தாரின் வீட்டிற்கு வரும் #பணக்கார_சூத்திரன் #சிவசு அந்த இல்லத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றவனாக இருப்பதையும், தன்னுடைய அம்மாவுடன் மிக அந்நியோன்யமாக நெருங்கி இருப்பதுபற்றியும் அறிகிறான்.
அப்புவின் அண்ணன் ஒருவன், சிவசு ஜாடையில் இருப்பதையும் உணர்கிறான்.
இது வீட்டில் உள்ளஅனைவருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கிறது. ஆனாலும் அதைக் கண்டு கொள்ளாமல், எல்லாரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள்.
அப்பா, அக்கா, அண்ணன், என எல்லோருக்கும் தெரிந்த உண்மை தனக்குத் தெரியாமல் போனதை உணர்கிறான் அப்பு !
அதனால் மனமுடைந்த அப்பு, மீண்டும் வேத பாடசலை உள்ள மடத்திற்கே திரும்புகிறான்.. இந்துவோடு சேர்கிறான்.
இதற்கிடையில் அப்புவின் மீது அளவிலாப் பாசம் வைத்திருக்கும் அவன் #அம்மாஅலங்காரம் அப்புவைப் பிரியமுடியாமல் வேத பாடசாலைக்கு வந்து அப்புவைப் பார்த்துவிட்டு, தான் செய்த பாவங்களுக்குக் #கழுவாய் தேடுவதற்காகக் #காசிக்குச் செல்கிறாள்.
இத்துடன் புதினத்தை முடித்து விடுகிறார் தி.ஜானகிராமன்,
இன்று திரு.ஜானகிராமன் பிறந்த நாள், 28, பிடப்ரவரி (1921)
வாழ்க வளர்க அவர் புகழ் !
(தொகுத்து எழுதப்பட்டது)
Prem: மரப்பசுவைப் பற்றி நேற்று கதையாடல் ஒன்று கேட்டுக் கொண்டிருந்தேன்…. இன்னும் முடிக்கவில்லை Latha Kumar: கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்ங்க. Shan: நான் படித்த முதல் தி.ஜா வின் நாவல். மிக சிறப்பாக இருக்கும். அதுவும் அறுபதுகளில் ஒரு எழுத்தாளர் இந்த நாவலை எழுதியது என்பது இன்னும் வியப்பாகவே இருக்கும் Shan: தனது முதல் எண்ணிக்கையை ( பதிவு) தொடங்கி உள்ளார் நமது பிரேம்👏👏👏
🤱#அத்தை🤱
💐💐💐💐💐💐💐
படித்தததில் பிடித்தது 👌
⚖️👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾⚖️
பாசமலர் படத்துக்குப் போகும்போதே அழுதழுது தலைவலிக்கும் என்பதால் அனாசின் மாத்திரை வாங்கி முந்தானையில் முடிச்சிட்டு தியேட்டருக்கு கொண்டுபோன அத்தைகளிருந்தார்கள்.
எம்மகள கட்டிக்கடா மருமகனே என்றபடியே அண்ணன் மகன்களின் குஞ்சாமணியைத் தொட்டுக் கொஞ்சி முத்தமிட்ட அத்தைகளிருந்தார்கள்.
சின்னப் பாத்திரத்தில் கறித்துண்டுகள் நீந்தும் கோழிக்குழம்பை இடதுகையால் பிடித்து முந்தானைச்சேலையால் மூடிக் கொண்டுவந்து பையனுக்குக் கொடுங்க அண்ணி என்று கொடுத்துவிட்டுப் போன அத்தைகளிருந்தார்கள்.
மருமகன்களின் பிறந்த நாட்களில் அத்தை தரும் சில்லறைக் காசுகளை மறுதலித்தால் கண்கள் நிறைந்த அழுகையாய் மூக்குறிஞ்சியபடி காசை வாங்கிக்கடா என்று கெஞ்சிய அத்தைகளிருந்தார்கள்.
குளிக்க மறுத்து ஓடிப்போகும் அண்ணனின் சிறு மகன்களைத் துரத்திப்போய்ப் பிடித்து வந்து சிரிப்புக் காட்டி அம்மணமாய் நிறுத்தி எண்ணை தேய்த்துக் குளிக்க வைத்த அத்தைகளிருந்தார்கள்.
இடுப்பில் தூக்கிச் சுமந்துபோய் திருவிழாவில் மருமகன் அழுவதைக் காணப்பொறாமல் இராட்டினத்தில் சுற்றும் சுகத்தையும் கொடுத்த அத்தைகளிருந்தார்கள்.
SSLC முடித்து பாலிடெக்னிக் சேர்க்க பணம் குறைந்து கைபிசைந்து நின்ற நேரத்தில் இதைவெச்சு காலேஜுல சேர்த்துங்க அண்ணி. அப்புறமா பார்த்துக்கலாம் என்றபடி எண்ணையிறங்கிய கல்லுக் கம்மலைக் கழட்டிக் கொடுத்துப்போன அத்தைகளிருந்தார்கள்..
வெட்கத்தில் நெளிந்தபடி உடைந்த விடலை இருகுரலில் பேசும் மருமகனின் அரும்புமீசைப் பூனைமயிர்களைச் செல்லமாய்ப் பிடித்து இழுத்தபடி என் மருமவனே வயசுக்கு வந்திட்டேடா என்று கிண்டலடித்துக் கூசவைத்த அத்தைகளிருந்தார்கள்.
சகோதரனின் பிள்ளைகளுக்கு பெரியம்மை வந்தகாலத்தில் மாரியம்மனுக்கு வேண்டிக்கொண்டு மண்சோறுதின்ற வெள்ளந்தி அத்தைகளிருந்தார்கள்.
எம் மவனுக்குப் பொண்ணு கொடுக்காமல் பெறத்திக்குக் கொடுக்கிறியே சண்டாளா என்று அண்ணனிடம் சண்டையிட்டுப்போன அத்தைகள் இருந்தார்கள்.
போகட்டும் ரெண்டாம் மகனுக்காவது பொண்ணைக் கட்டிக் கொடுத்திரனும் எப்படியாவது சொந்தம் விட்டுப் போகக்கூடாதுன்னு மூஞ்சியைத் தூக்கிவைத்துக்கொண்டே மூக்கு நுனியில் கண்ணீர் வடித்தபடி மூத்தவனின் திருமணத்தில் பாத்திரங்களை விளக்கிக் கொடுத்த அத்தைகளிருந்தார்கள்.
அண்ணன் பாவம் நொடிஞ்சி கெடக்குது எனக்கு வீடெல்லாம் வேண்டாம் அண்ணனுக்கே கொடுத்திருங்க… ஒங்க மாப்பிள்ளைகிட்டே நான் சொல்லிக்கிறேன் என்று தகப்பனிடம் அண்ணணுக்காக மன்றாடிய அத்தைகள் இருந்தார்கள்.
எல்லாந் தொலைந்து கூட்டுக் குடும்பங்கள் அழிந்துபோய் காங்கிரீட் கூடுகளுக்குள் பிழைத்துக் கிடக்கும் ஒற்றைப்பிள்ளைக் குடும்பங்களின் அடுத்த தலைமுறைக்கு வாய்க்கப் போவதேயில்லை…. அத்தைகளின் பாசப் பெருமழை
கழல்கள் சந்திப்பு – இளமை நினைவுகள் [7/15/23ஞ Shan: இன்றைய சந்திப்பு அருமை மற்றும் இனிமை.. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி♥️🙏🙏🙏 Vinoth: எதைப்பற்றி உரையாடுவது என்னும் குழப்பதில் துவங்கி நேரம் போதவில்லை என்ற ஏக்கத்தில் முடிந்த இந்த சந்திப்பு.
கழல்கள் குழுவை உருவாக்கியதின் குறிக்கோளை பறைசாற்றும் வண்ணம் இருந்தது மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏 RAMCHANDAR M: நினைவலைகளில் நீந்தச்செய்துவிட்டது.. நண்பர்களின் அனுபவப்பகிர்வுகள் Shan: இன்றைய உரையாடலில் கீரிப்பிள்ளையையும் பற்றி கலந்துரையாடினோம். லதா டீச்சர் பாம்பு கீரிக் கதை சிலப்பதிகாரத்தில் வருது என்று மேலதிக தகவலை பகிர்ந்தார்கள்.. ♥️♥️ Shan: நமது சேர இளவல் இளங்கோ கீரி பிள்ளையை “பிள்ளை நகுலம்” என்று மிக அழகாக குறிப்பிடுகின்றார்👌 [7/15/23, 11:18:36 PM] Indhira: Very interesting talk.. lived in my childhood memories again today.. thank you for this interactive session..😊 கவிதை கடைசி பேன்ஞ் முதல் பென்ஞ் என்பதை கூட தீன்டாமையாய் கருதும் நான் அமர எல்லா பென்ஞ் நண்பரும் காத்திருப்பர்.
எப்போதும் நேரம் தவராமல் லேட்டாய் வரும் நான் அமர தோழர்கள் மட்டும் அல்ல தோழிகளும் இடம் தருவதுன்டு. ஆண்பென் இருவருக்கும் பிடித்த புலிப்பு மிட்டாய் பேச்சுக்கு காத்திருக்கும் ஒரு கூட்டம்.
நான் உரங்கா அரைகள் இல்லை, ஞயிரு மட்டும் போன் பேசும் அப்பா காத்திருந்தால் 3 ரூபாய் செலவாகும் என்பதால் வாச்மேன் உடன் உரையாடலுடன் 5 மனிக்கு வாரத்தை துவங்கும் நான், பேசாத நண்பனின் தந்தைகள் இல்லை, தட்டாத கதவுகள் இல்லை.
புகை பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்படதால் மைதானத்தில் இயர்க்கையுன் இல்லாமல் குளியல் அரையில் தம் அடித்கும் புரட்சிப்படையின் தளபதி நான் செல்லாத இடம் என்றும் எதுவும் இல்லை கல்லூரி விடுதியில்
நேற்றுவரை எங்கும் பரவிய என் இருப்பை வாசலில் நிருத்தி வருகைப்பதிவேட்டில் பெயர் எழுத சொன்னவுடன் உனர்தேன், உலக நியதியை Vinoth: நீன்ட இடைவேலைக்கு பிரகு எனது சொன்த படைப்பு பிழை ஏதும் இருந்தான் மன்னிக்கவும் Shan: சிறப்பு வினோத்.. மழலையின் பிழை ரசிக்க கூடியதே.. இங்கு நாம் எல்லோரும் மழலைகலே ♥️. தொடர்ந்து எழுதுங்கள் மழலை மலையாகும்.. விதை கவிதையாகும்👏👏👏👏 Latha Kumar: ஆங்கில அட்சியின் விளைவு. RAMCHANDAR M: அருமை Vinoth: சிரிய உரையாடல் போல் இருக்குமாரு என்னியே இப்படி எழுதினேன் Latha Kumar: அருமை. 👌 மிளகாய் Shan: மிளகாய் தமிழ் நாட்டிற்கு வந்தது சிலி நாட்டில் இருந்து காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும்.
கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ் நாட்டிற்குள் புகுந்தது. அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காகக் கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே ‘கறி’ எனப் வழங்கப்பட்டது. பின்னர் வெள்ளை மிளகினைத் (வால்மிளகு) தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர்.
#அறியப்படாத_தமிழகம் பத்தாயம் Latha Kumar: வாமடை பத்தாயம் விளக்கம் அளிக்க முடியுமா? Shan: மடை என்பது நீர் போகும் ஒரு வழி என்பது நமக்கு தெரியும். ஏரி குளம் ஆறுகளில் பார்த்து இருப்போம். அதே போல வயலிலும் இரு மடைகள் உள்ளது. நீர் உள்ளே வரும் வழி வாய்மடை . நீர் வெளியேறும் வழி வடிமடை. அந்த வாய்மடை தான் வாமடை என்று எங்க வட்டாரத்தில ( தஞ்சை புதுகை) சொல்லுவோம். அது ஒரு வட்டார வழக்குச் சொல்.. மழைக் காலத்தில்( ஐப்பசி) பெரும் மழை பெய்வதினால் வயலுக்கு நீர் தேவையில்லை. ஒரு வேளை அதிக நீர் வரத்து வாமடை வழியாக வந்தால் வயலின் வரப்புகள் தாங்காமல் உடைப்பு ஏற்ப்படும். அதனால் மழைக் காலங்களில் வாமடை எப்பொழுதும் அடைத்து ( கட்டி) இருக்கும். வடிமடை வழியாக உபரி நீர் வெளியேறிக் கொண்டிருக்கும். 😊 Shan: பத்தாயம். விவசாய வீடுகளில் நெல் விதைகளை மற்றும் மற்ற தாணியங்களை சேமித்து வைக்க பயன்படும் மரத்தினாலான ஒரு வகை பல அடுக்குகளை கொண்ட உயரமான பெட்டியே பத்தாயம். நாம் அதை ஒவ்வொரு அடுக்காக இணைக்கலாம் அல்லது அகற்றலாம் பத்தாயத்தின் கீழ் அடுக்கில் சின்னதாக ஒரு கதவு போன்று அமைப்பு இருக்கும் அதை திறந்தால் நெல் வெளியே தன்னால் வந்துவிடும். தேவையான நெல்லை எடுத்துக்கொண்டு மீண்டும் அடைத்து விடலாம். பத்தாயத்தில் நெல்லை வைப்பதினால் பூச்சிகள் மற்றும் எலிகளிடமிருந்து நெல்லை எளிதாக பாதுகாக்கலாம். எங்க வீட்டு பத்தாயத்துல இப்ப எங்கம்மா மற்றும் என் மனைவிக்கு சீர் கொடுத்த வெங்கல பாத்திரங்கள் பத்திரமாக உள்ளது😂😃 Shan: பத்து+ஆயம்=பத்தாயம் ஆயிற்று. பத்து-பத்திரமான, பாதுகாப்பான; ஆயம் - கூட்டம், நெருக்கம், குவியல், சேர்க்கை. நெல் மணிகளின் கூட்டம். நெல்மணிகளின் குவியல், நெல் மணிகளின் சேர்க்கை, நெல் மணிகளின் நெருக்கம். பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைக்கப்படும் இடம் பத்தாயம் ஆயிற்று. எனவேதான் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் பேணப்பட வேண்டிய அந்த உயரிய ஆவணங்கள் பத்திரம் எனப்பட்டது. வரவு செலவுக் கணக்கு எழுதுகிற நாம் நமது பாதுகாப்பான அந்தக் குறிப்பேட்டுப் புத்தகத்தை பத்து அல்லது பற்று வரவுக் கணக்கு என்று சொல்லுகிறோம். Vinoth: அப்போது நான் சிறுவனாய் இருக்கும் போது பத்தாயத்தின் உள்ளே சென்று விளையாடுவோம். சற்று பெரியதாய் இருக்கும். நீளம் 6 அடி என நினைக்கிறேன். 4 அடுக்குகளும் 3 அடி அகலமும் உடையது. கிருஷ்டிணாபுரம் என்ற ஊரில் இருக்கும் எனது தாத்தா (என் சித்தியின் அப்பா) ஒரு விவசாயி. அவர் மாட்டுவண்டியில் சில மூட்டைகளை அறுவடை முடிந்த உடன் எங்கள் வீட்டுக்குக் கொண்டு வருவார். மாட்டு வண்டி பயணம் ஒரு சிறப்பு அனுபவமாக இருக்கும். அவர் ஊர் செல்லும் போது சில சமயம் நானும் செல்வதுண்டு. எப்போதும் வெற்றிலை போடும் பாட்டியும் தாத்தாவும் நிறைய கதைகள் சொல்வார்கள். அரிசி மட்டுமே கிடப்பதால் பத்தாயத்தில் ஒரு தனி வாசம் வரும். உள்ளே சென்றால் நன்றாக வியர்க்கும். என் பதின்மவயது பத்தாயிரம் கதைகளை அடங்கியுள்ளது அந்தப் பத்தாயம். இன்றும் எனக்கு அதன் வாசனை நினைவில் உள்ளது.
Shan: அந்த கதைகள் எல்லாம் விதை நெல் போன்றது. எப்பொழுது எல்லாம் வாழ்க்கை சலிப்பாகிறதோ.. அப்பொழுதெல்லாம் பத்தாயத்தின் கதவுகளை மேலிழுங்கள்!!!
RAMCHANDAR M: குழந்தைகளிடம் பகிருங்கள் உப்பு உப்பு பற்றியும் இருக்கும்…நல்ல களஞ்சியம் அந்த புத்தகம் Swami: உப்பு சரி…உப்புமா பத்தி வரலாறு கிடைக்குமா??? 😁 Swami: உப்புமா Dish ..நமது பாரம்பரியமா..இல்லை அயலகத்திலிருந்து தொற்றிக் கொண்டதா?
இரும்பு சட்டியில் செய்த அரிசி உப்புமா..என்னோட Favorite..
உதிரி உதிரியாக ஒட்டாமல் செய்த சேமியா உப்புமா ல..தேங்காய துருவி மேல போட்டு சாப்பிட்டா சிறப்பாக இருக்கும்..
இஞ்சி தூக்கலாக போட்டு பிறு பிறு வென்று வறுத்த வேர்கடலை போட்ட கோதுமை ரவாஉப்புமா..ஒரு Plate fulla வைம்மா னு சொல்லும்…
உப்புமாவின் வரலாறு தெரிந்தவர்கள் தகவல் கொடுங்கள். Shan: சிற(உ)ப்பு!. உண்மையை சொல்லப் போனால் மறைந்த பேரா. திரு தொ. பரமசிவன் அவர்கள் பண்பாட்டு ஆய்வுத் துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்து சென்றிருக்கின்றார். 👌👌🙏🙏