நடனமும், சமையலும்!
நடனமும், சமையலும்!
Thamilvanan
‘வாவ்’ என்று நீங்கள் வியந்த நடனத்தை ஞாபகப்படுத்துங்கள்! மனமும், உடலும் ஒத்திசைந்து நிகழ்த்தும் அதிசயம் உங்கள் கண் முன் வரும்.
மனம் முழுவதும், உடலின் அசைவுகளில் லயித்தால், நடந்தால் கூட நடனமாகும். அதில் லயம் இருக்கும்.
சமையலும் அப்படித்தான். செய்யும் உணவில் உங்கள் மனம் லயித்தால், வெந்நீர் கூட அமிழ்தம் ஆகும். உங்கள் கை வித்தைகள் செய்கிறது என்று உண்பவர்கள் சொல்வார்கள்.
உடலசைவுகள், கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால், நடனம் சகிக்காது. உப்போ, காரமோ, இனிப்போ கூடினாலும், குறைந்தாலும், சமையல் சகிக்காது.
நடனத்தில் அசையும் உடலுடன், மனமும் அசைகிறது. சமையலில், பொங்கும் பாலுடன் மனமும் பொங்கி வழிகிறது.
அன்பு செய்யும் மனம் சொன்னதையெல்லாம் உடல் கேட்கிறது. அன்பு செய்யும் கைகள் சொன்னதையெல்லாம், உணவு கேட்கிறது.
ஆம், நடனத்தைப் போல, சமையலும் கலையே!