பாலங்கள் 1983
புத்தக வாசிப்புத் தொடர் - (மார்ச் வாசிப்பு மாரத்தான்)
வாசகரின் பெயர்: லதா குமார்
வாசகரின் ஊர்/ மாநிலம்: நோவாய்,மிச்சிகன் (Novi MI)
புத்தகத்தின் பெயர்: பாலங்கள் 1983
எழுத்தாளர்: சிவசங்கரி
பக்கங்கள்: 172
பாலங்கள்:
-
1983 ‘கஸ்தூரி ஸ்ரீனிவாசன்’ விருது மற்றும் பத்தாயிரம் ரூபாய் பரிசு பெற்ற நாவல்.
-
1983 ல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இந்த நாவல் இன்றும், என்றும் பேசப்படுகிற, ஆவணப்படுத்தப்பட வேண்டிய அரியதொரு கதை.
-
இந்த நாவலில் 1907 முதல் 1998 வரை பிராம்மண சமூகத்தில் ஏற்பட்ட சம்பிரதாய உருமாற்றத்தினை படிப்படியாக விவரித்து சொல்கிறார்.
-
இந்தக் கதை மூன்று காலகட்டங்களில் நடக்கும் (1907 - 1931, 1950- 1964, 1965 - 1985 கடைசியாக 1998) மூன்று விதமான கதைகள் கொண்டது.
-
1907 - 1931 1930 களில் உள்ள இந்துக் குடும்பத்து சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும், சடங்குகளும் …
-
1950- 1964 1960-களில் பெண்கள் பள்ளிக்குப் போகவும், மற்ற புதுமைகளை ஏற்க விரும்பும் ஒரு நடுத்தரக் குடும்பத்துக் கதையும்,
-
1965 - 1985 1980-களில் பெண்கள் எவ்வளவு தைரியமான மனப்போக்கு உடையவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாவும் உள்ளவர்களாக மாறியுள்ளார்கள் என்பதையும்,
-
கடைசியாக 1998களில் கலாச்சாரமும் மொழியும் எவ்வாறு மாற்றம் அடைந்தது என்பதையும் இந்நாவலில் மூலம் மிக அழகாக பதிவு செய்திருக்கிறார்.
-
மூன்று தலைமுறைகள், மூன்று குடும்பங்கள், ஒவ்வொன்றிலும் பாட்டிக்கும் பேத்திக்கும் உள்ள இடைவெளியை பாலமாய் இருந்து சமாளிக்கும் அம்மா என கதையின் எதார்த்த நடையுடன் வெகு இயல்பாக நம்மை கதைக்குள் இழுத்து விடுகிறார்.
-
தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் அரவணைப்பு, தஞ்சாவூர் அக்ரஹாரக் குடும்பங்களின் ஐம்பது-அறுபது வருஷங்களுக்கு முந்தைய பழக்க வழக்கங்கள் அத்தனையும் எக்கச்சக்க நுண்விவரங்களோடு பதிவு செய்திருக்கிறார்.
நான் என் இளம் வயதில் விரும்பிப் படித்த இந்த நாவலை மீண்டும் படித்து உங்களோடு பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி. இதுபோல் நீங்களும் படித்து மகிழ்வீர்கள் என்று நினைக்கிறன்.
லதா குமார். 3/27/2023 மீண்டும் ஒரு நூல் அறிமுகத்தோடு சந்திப்போம்…