இரபீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள்
இரபீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள்
இன்று, மே 7, 1861 (- ஆகஸ்ட் 7 1941)
Latha
💥💥💥💥💥
இந்தியத் துணைக்கண்டத்துக்கு வங்கக் கவி. இரபீந்திரநாத் தாகூர் இயற்றிய தேசிய கீதம் (National Anthem) வரிகள் இவை.
ஜன கண மன அதிநாயக ஜய கே
பாரத பாக்கிய விதாதா.
பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல சலதி தரங்கா.
தவ சுப நாமே சாகே,
தவ சுப ஆசிச மாகே,
காகே தவ ஜய காதா.
சன கண மங்கள தாயக ஜயகே
பாரத பாக்கிய விதாதா.
ஜய கே, ஜய கே, ஜய கே,
ஜய ஜய ஜய, ஜய கே.
இதன் தமிழாக்கம் இது:-
👇👇👇👇👇
இந்தியத் தாயே! மக்களின்
இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற
நீயே எல்லாருடைய மனத்திலும்
ஆட்சி செய்கிறாய்.
நின் திருப்பெயர்
பஞ்சாபையும், சிந்துவையும்,
கூர்ச்சரத்தையும்
மராட்டியத்தையும்,
#திராவிடத்தையும்,
ஒரிசாவையும்.
வங்காளத்தையும்,
உள்ளக் கிளர்ச்சி அடையச்
செய்கிறது.
நின் திருப்பெயர் விந்திய, '
இமய மலைத் தொடர்களில்
எதிரொலிக்கிறது; யமுனை,
கங்கை ஆறுகளின்
இன்னொலியில் ஒன்றுகிறது;
இந்தியக் கடலலைகளால்
வணங்கப்படுகிறது.
அவை நின்னருளை
வேண்டுகின்றன;
நின் புகழைப் பரப்புகின்றன.
இந்தியாவின் இன்ப
துன்பங்களைக் கணிக்கின்ற.
தாயே. 'உனக்கு
வெற்றி! வெற்றி! வெற்றி !
இதனை எல்லா அரசு விழாக்களிலும் இசைக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.
இந்த கீதத்தின் வரலாறு
-
1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி முதன் முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரசு மாநாடு நடக்கும்போது இப்பாடல் பாடப்பட்டது.
-
சரளாதேவி கோஷல்/ சௌத்ராணி (தாகூரின் அக்கா ஸ்வர்ணகுமாரி தேவியின் மகள்) இந்தப் பாடலைப் பாடினார்.
-
சனவரி 24, 1950 ஆம் ஆண்டு தான் “ஜன கன மண’ இந்தியாவின் தேசிய கீதமாகவும் (National Anthem), “வந்தே மாதரம்’ தேசியப் பாடலாகவும் ( National Song ), இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர். இராசேந்திர பிரசாத் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
-
தேசிய கீதத்தை ஒருநிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது.
-
தேசிய கீதம் பாடும்போது ஆடாமல் அசையாமல் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும்.
-
இந்தியாவின் சகல விதமான அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்துவது வழக்கமாக உள்ளது.
வாழ்க! வளர்க!