தாவரத்தின் பிஞ்சு வகைகள்
தாவரத்தின் பிஞ்சு வகைகள்
Shan
பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு
பிஞ்சு: இளம் காய்
வடு: மாம்பிஞ்சு
மூசு: பலாப்பிஞ்சு
கவ்வை: எள்பிஞ்சு
குரும்பை: தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
முட்டுக் குரும்பை: சிறு குரும்பை
இளநீர்: முற்றாத தேங்காய்
நுழாய்: இளம்பாக்கு
கருக்கல்: இளநெல்
கச்சல்: வாழைப்பிஞ்சு
இதை நாம் வெவ்வேறு ஊர்களில் வட்டார வழக்காக பயன்படுத்தி இருப்போம்.. எங்க ஊருல பலாப் பிஞ்சை பலா மூசு ணு தான் சொல்லுவோம்..