அத்தை
🤱அத்தை🤱
💐💐💐💐💐💐💐
படித்தததில் பிடித்தது 👌
⚖️👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾⚖️
பாசமலர் படத்துக்குப் போகும்போதே அழுதழுது தலைவலிக்கும் என்பதால் அனாசின் மாத்திரை வாங்கி முந்தானையில் முடிச்சிட்டு தியேட்டருக்கு கொண்டுபோன அத்தைகளிருந்தார்கள்.
எம்மகள கட்டிக்கடா மருமகனே என்றபடியே அண்ணன் மகன்களின் குஞ்சாமணியைத் தொட்டுக் கொஞ்சி முத்தமிட்ட அத்தைகளிருந்தார்கள்.
சின்னப் பாத்திரத்தில் கறித்துண்டுகள் நீந்தும் கோழிக்குழம்பை இடதுகையால் பிடித்து முந்தானைச்சேலையால் மூடிக் கொண்டுவந்து பையனுக்குக் கொடுங்க அண்ணி என்று கொடுத்துவிட்டுப் போன அத்தைகளிருந்தார்கள்.
மருமகன்களின் பிறந்த நாட்களில் அத்தை தரும் சில்லறைக் காசுகளை மறுதலித்தால் கண்கள் நிறைந்த அழுகையாய் மூக்குறிஞ்சியபடி காசை வாங்கிக்கடா என்று கெஞ்சிய அத்தைகளிருந்தார்கள்.
குளிக்க மறுத்து ஓடிப்போகும் அண்ணனின் சிறு மகன்களைத் துரத்திப்போய்ப் பிடித்து வந்து சிரிப்புக் காட்டி அம்மணமாய் நிறுத்தி எண்ணை தேய்த்துக் குளிக்க வைத்த அத்தைகளிருந்தார்கள்.
இடுப்பில் தூக்கிச் சுமந்துபோய் திருவிழாவில் மருமகன் அழுவதைக் காணப்பொறாமல் இராட்டினத்தில் சுற்றும் சுகத்தையும் கொடுத்த அத்தைகளிருந்தார்கள்.
SSLC முடித்து பாலிடெக்னிக் சேர்க்க பணம் குறைந்து கைபிசைந்து நின்ற நேரத்தில் இதைவெச்சு காலேஜுல சேர்த்துங்க அண்ணி. அப்புறமா பார்த்துக்கலாம் என்றபடி எண்ணையிறங்கிய கல்லுக் கம்மலைக் கழட்டிக் கொடுத்துப்போன அத்தைகளிருந்தார்கள்..
வெட்கத்தில் நெளிந்தபடி உடைந்த விடலை இருகுரலில் பேசும் மருமகனின் அரும்புமீசைப் பூனைமயிர்களைச் செல்லமாய்ப் பிடித்து இழுத்தபடி என் மருமவனே வயசுக்கு வந்திட்டேடா என்று கிண்டலடித்துக் கூசவைத்த அத்தைகளிருந்தார்கள்.
சகோதரனின் பிள்ளைகளுக்கு பெரியம்மை வந்தகாலத்தில் மாரியம்மனுக்கு வேண்டிக்கொண்டு மண்சோறுதின்ற வெள்ளந்தி அத்தைகளிருந்தார்கள்.
எம் மவனுக்குப் பொண்ணு கொடுக்காமல் பெறத்திக்குக் கொடுக்கிறியே சண்டாளா என்று அண்ணனிடம் சண்டையிட்டுப்போன அத்தைகள் இருந்தார்கள்.
போகட்டும் ரெண்டாம் மகனுக்காவது பொண்ணைக் கட்டிக் கொடுத்திரனும் எப்படியாவது சொந்தம் விட்டுப் போகக்கூடாதுன்னு மூஞ்சியைத் தூக்கிவைத்துக்கொண்டே மூக்கு நுனியில் கண்ணீர் வடித்தபடி மூத்தவனின் திருமணத்தில் பாத்திரங்களை விளக்கிக் கொடுத்த அத்தைகளிருந்தார்கள்.
அண்ணன் பாவம் நொடிஞ்சி கெடக்குது எனக்கு வீடெல்லாம் வேண்டாம் அண்ணனுக்கே கொடுத்திருங்க… ஒங்க மாப்பிள்ளைகிட்டே நான் சொல்லிக்கிறேன் என்று தகப்பனிடம் அண்ணணுக்காக மன்றாடிய அத்தைகள் இருந்தார்கள்.
எல்லாந் தொலைந்து கூட்டுக் குடும்பங்கள் அழிந்துபோய் காங்கிரீட் கூடுகளுக்குள் பிழைத்துக் கிடக்கும் ஒற்றைப்பிள்ளைக் குடும்பங்களின் அடுத்த தலைமுறைக்கு வாய்க்கப் போவதேயில்லை…. அத்தைகளின் பாசப் பெருமழை
கழல்கள் சந்திப்பு – இளமை நினைவுகள் [7/15/23ஞ Shan: இன்றைய சந்திப்பு அருமை மற்றும் இனிமை.. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி♥️🙏🙏🙏 Vinoth: எதைப்பற்றி உரையாடுவது என்னும் குழப்பதில் துவங்கி நேரம் போதவில்லை என்ற ஏக்கத்தில் முடிந்த இந்த சந்திப்பு.
கழல்கள் குழுவை உருவாக்கியதின் குறிக்கோளை பறைசாற்றும் வண்ணம் இருந்தது மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏 RAMCHANDAR M: நினைவலைகளில் நீந்தச்செய்துவிட்டது.. நண்பர்களின் அனுபவப்பகிர்வுகள் Shan: இன்றைய உரையாடலில் கீரிப்பிள்ளையையும் பற்றி கலந்துரையாடினோம். லதா டீச்சர் பாம்பு கீரிக் கதை சிலப்பதிகாரத்தில் வருது என்று மேலதிக தகவலை பகிர்ந்தார்கள்.. ♥️♥️ Shan: நமது சேர இளவல் இளங்கோ கீரி பிள்ளையை “பிள்ளை நகுலம்” என்று மிக அழகாக குறிப்பிடுகின்றார்👌 [7/15/23, 11:18:36 PM] Indhira: Very interesting talk.. lived in my childhood memories again today.. thank you for this interactive session..😊 கவிதை கடைசி பேன்ஞ் முதல் பென்ஞ் என்பதை கூட தீன்டாமையாய் கருதும் நான் அமர எல்லா பென்ஞ் நண்பரும் காத்திருப்பர்.
எப்போதும் நேரம் தவராமல் லேட்டாய் வரும் நான் அமர தோழர்கள் மட்டும் அல்ல தோழிகளும் இடம் தருவதுன்டு. ஆண்பென் இருவருக்கும் பிடித்த புலிப்பு மிட்டாய் பேச்சுக்கு காத்திருக்கும் ஒரு கூட்டம்.
நான் உரங்கா அரைகள் இல்லை, ஞயிரு மட்டும் போன் பேசும் அப்பா காத்திருந்தால் 3 ரூபாய் செலவாகும் என்பதால் வாச்மேன் உடன் உரையாடலுடன் 5 மனிக்கு வாரத்தை துவங்கும் நான், பேசாத நண்பனின் தந்தைகள் இல்லை, தட்டாத கதவுகள் இல்லை.
புகை பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்படதால் மைதானத்தில் இயர்க்கையுன் இல்லாமல் குளியல் அரையில் தம் அடித்கும் புரட்சிப்படையின் தளபதி நான் செல்லாத இடம் என்றும் எதுவும் இல்லை கல்லூரி விடுதியில்
நேற்றுவரை எங்கும் பரவிய என் இருப்பை வாசலில் நிருத்தி வருகைப்பதிவேட்டில் பெயர் எழுத சொன்னவுடன் உனர்தேன், உலக நியதியை Vinoth: நீன்ட இடைவேலைக்கு பிரகு எனது சொன்த படைப்பு பிழை ஏதும் இருந்தான் மன்னிக்கவும் Shan: சிறப்பு வினோத்.. மழலையின் பிழை ரசிக்க கூடியதே.. இங்கு நாம் எல்லோரும் மழலைகலே ♥️. தொடர்ந்து எழுதுங்கள் மழலை மலையாகும்.. விதை கவிதையாகும்👏👏👏👏 Latha Kumar: ஆங்கில அட்சியின் விளைவு. RAMCHANDAR M: அருமை Vinoth: சிரிய உரையாடல் போல் இருக்குமாரு என்னியே இப்படி எழுதினேன் Latha Kumar: அருமை. 👌 மிளகாய் Shan: மிளகாய் தமிழ் நாட்டிற்கு வந்தது சிலி நாட்டில் இருந்து காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும்.
கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ் நாட்டிற்குள் புகுந்தது. அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காகக் கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே ‘கறி’ எனப் வழங்கப்பட்டது. பின்னர் வெள்ளை மிளகினைத் (வால்மிளகு) தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர்.
#அறியப்படாத_தமிழகம் பத்தாயம் Latha Kumar: வாமடை பத்தாயம் விளக்கம் அளிக்க முடியுமா? Shan: மடை என்பது நீர் போகும் ஒரு வழி என்பது நமக்கு தெரியும். ஏரி குளம் ஆறுகளில் பார்த்து இருப்போம். அதே போல வயலிலும் இரு மடைகள் உள்ளது. நீர் உள்ளே வரும் வழி வாய்மடை . நீர் வெளியேறும் வழி வடிமடை. அந்த வாய்மடை தான் வாமடை என்று எங்க வட்டாரத்தில ( தஞ்சை புதுகை) சொல்லுவோம். அது ஒரு வட்டார வழக்குச் சொல்.. மழைக் காலத்தில்( ஐப்பசி) பெரும் மழை பெய்வதினால் வயலுக்கு நீர் தேவையில்லை. ஒரு வேளை அதிக நீர் வரத்து வாமடை வழியாக வந்தால் வயலின் வரப்புகள் தாங்காமல் உடைப்பு ஏற்ப்படும். அதனால் மழைக் காலங்களில் வாமடை எப்பொழுதும் அடைத்து ( கட்டி) இருக்கும். வடிமடை வழியாக உபரி நீர் வெளியேறிக் கொண்டிருக்கும். 😊 Shan: பத்தாயம். விவசாய வீடுகளில் நெல் விதைகளை மற்றும் மற்ற தாணியங்களை சேமித்து வைக்க பயன்படும் மரத்தினாலான ஒரு வகை பல அடுக்குகளை கொண்ட உயரமான பெட்டியே பத்தாயம். நாம் அதை ஒவ்வொரு அடுக்காக இணைக்கலாம் அல்லது அகற்றலாம் பத்தாயத்தின் கீழ் அடுக்கில் சின்னதாக ஒரு கதவு போன்று அமைப்பு இருக்கும் அதை திறந்தால் நெல் வெளியே தன்னால் வந்துவிடும். தேவையான நெல்லை எடுத்துக்கொண்டு மீண்டும் அடைத்து விடலாம். பத்தாயத்தில் நெல்லை வைப்பதினால் பூச்சிகள் மற்றும் எலிகளிடமிருந்து நெல்லை எளிதாக பாதுகாக்கலாம். எங்க வீட்டு பத்தாயத்துல இப்ப எங்கம்மா மற்றும் என் மனைவிக்கு சீர் கொடுத்த வெங்கல பாத்திரங்கள் பத்திரமாக உள்ளது😂😃 Shan: பத்து+ஆயம்=பத்தாயம் ஆயிற்று. பத்து-பத்திரமான, பாதுகாப்பான; ஆயம் - கூட்டம், நெருக்கம், குவியல், சேர்க்கை. நெல் மணிகளின் கூட்டம். நெல்மணிகளின் குவியல், நெல் மணிகளின் சேர்க்கை, நெல் மணிகளின் நெருக்கம். பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைக்கப்படும் இடம் பத்தாயம் ஆயிற்று. எனவேதான் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் பேணப்பட வேண்டிய அந்த உயரிய ஆவணங்கள் பத்திரம் எனப்பட்டது. வரவு செலவுக் கணக்கு எழுதுகிற நாம் நமது பாதுகாப்பான அந்தக் குறிப்பேட்டுப் புத்தகத்தை பத்து அல்லது பற்று வரவுக் கணக்கு என்று சொல்லுகிறோம். Vinoth: அப்போது நான் சிறுவனாய் இருக்கும் போது பத்தாயத்தின் உள்ளே சென்று விளையாடுவோம். சற்று பெரியதாய் இருக்கும். நீளம் 6 அடி என நினைக்கிறேன். 4 அடுக்குகளும் 3 அடி அகலமும் உடையது. கிருஷ்டிணாபுரம் என்ற ஊரில் இருக்கும் எனது தாத்தா (என் சித்தியின் அப்பா) ஒரு விவசாயி. அவர் மாட்டுவண்டியில் சில மூட்டைகளை அறுவடை முடிந்த உடன் எங்கள் வீட்டுக்குக் கொண்டு வருவார். மாட்டு வண்டி பயணம் ஒரு சிறப்பு அனுபவமாக இருக்கும். அவர் ஊர் செல்லும் போது சில சமயம் நானும் செல்வதுண்டு. எப்போதும் வெற்றிலை போடும் பாட்டியும் தாத்தாவும் நிறைய கதைகள் சொல்வார்கள். அரிசி மட்டுமே கிடப்பதால் பத்தாயத்தில் ஒரு தனி வாசம் வரும். உள்ளே சென்றால் நன்றாக வியர்க்கும். என் பதின்மவயது பத்தாயிரம் கதைகளை அடங்கியுள்ளது அந்தப் பத்தாயம். இன்றும் எனக்கு அதன் வாசனை நினைவில் உள்ளது.
Shan: அந்த கதைகள் எல்லாம் விதை நெல் போன்றது. எப்பொழுது எல்லாம் வாழ்க்கை சலிப்பாகிறதோ.. அப்பொழுதெல்லாம் பத்தாயத்தின் கதவுகளை மேலிழுங்கள்!!!
RAMCHANDAR M: குழந்தைகளிடம் பகிருங்கள் உப்பு உப்பு பற்றியும் இருக்கும்…நல்ல களஞ்சியம் அந்த புத்தகம் Swami: உப்பு சரி…உப்புமா பத்தி வரலாறு கிடைக்குமா??? 😁 Swami: உப்புமா Dish ..நமது பாரம்பரியமா..இல்லை அயலகத்திலிருந்து தொற்றிக் கொண்டதா?
இரும்பு சட்டியில் செய்த அரிசி உப்புமா..என்னோட Favorite..
உதிரி உதிரியாக ஒட்டாமல் செய்த சேமியா உப்புமா ல..தேங்காய துருவி மேல போட்டு சாப்பிட்டா சிறப்பாக இருக்கும்..
இஞ்சி தூக்கலாக போட்டு பிறு பிறு வென்று வறுத்த வேர்கடலை போட்ட கோதுமை ரவாஉப்புமா..ஒரு Plate fulla வைம்மா னு சொல்லும்…
உப்புமாவின் வரலாறு தெரிந்தவர்கள் தகவல் கொடுங்கள். Shan: சிற(உ)ப்பு!. உண்மையை சொல்லப் போனால் மறைந்த பேரா. திரு தொ. பரமசிவன் அவர்கள் பண்பாட்டு ஆய்வுத் துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்து சென்றிருக்கின்றார். 👌👌🙏🙏