மஞ்ஞை
மஞ்ஞை
Shan
Shan:
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி! உண்கண்
நீரொடு ஓராங்குத் தணப்ப,
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.
(கபிலர் - குறுந்தொகை)
Shan: தோழி! நீ வாழ்க! காட்டிலுள்ள மயில் பாறையில் ஈன்ற முட்டைகளை, வெயிலில் விளையாடும் குரங்குக் குட்டிகள் உருட்டும் இடமாகிய, மலைநாட்டையுடையவனாகிய தலைவனது நட்பு என்றும் பெருமைக்குரியது. ஆனால், அவன் என்னைவிட்டுப் பிரிந்ததால், மை தீட்டிய என் கண்களிலிருந்து நீர் பெருகுகின்றன. அந்தப் பிரிவை நினைத்து ஒரேயடியாக வருந்தாமல், பொறுத்துக்கொள்ளும் ஆற்றல், மனதில் வலிமை உடையவர்களுக்கு மட்டுமே இருக்கும். எனக்கு அது இல்லையே!
Shan: அருஞ்சொற்பொருள்: கானம் = காடு; மஞ்ஞை = மயில்; அறை = பாறை; ஈனுதல் = பெறுதல்; முசு = குரங்கு (கருங்குரங்கு); குருளை = குட்டி; கேண்மை = நட்பு; நன்று = பெருமை; உண்கண் = மை தீட்டிய கண்கள்; உள்ளாது = நினையாது; ஒராங்கு = ஒரு படியாக; தணத்தல் = பிரிதல்.
Shan: இருந்தாலும் இருந்து இருக்கும்😀 இன்னும் நீங்க மஞ்ச மயக்கத்துல ( csk ) தான் இருக்கிங்க போல வசிகரன்!
Shan: சிறப்பு.. 👏👏 இதை வலைப்பூவில் பதிவேற்றம் செய்து விடுவோம்!!
Swami: மஞ்ச மயக்கத்தை இரட்டுற மொழிதலில் கூறியது போலிருக்கிறதே !🤪 Shan: 😂😀 கம்பரின் வரிகள்..
“பஞ்சி ஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சகிமிர் சீறடிய ளாகி
அஞ்சொல் இள மஞ்ஞை யென அன்னமென மின்னும்
வஞ்சி யென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”.