உதிரும் சிறகுகள்
படித்ததில் பிடித்தது
Indira
உதிரும் சிறகுகள்- கவிக்கோ அப்துல் ரகுமான்
மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம்
காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து -
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளரம் வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.
அரன் , அறண் yendra vaarthaigal irukirathaa?
Latha Kumar: அறன் அரண்
Meyyappan: Just to my knowledge, first is fort or protection. Second is moral principles or ethics
Meyyappan: The n has to be changed as Latha Teacher mentioned
Latha Kumar: Never heard of bulwark
Swami: no, i am purposely asking wrong “n” on both - அறன் - anbum aranum udaithayin ilvazhkai அரண் - aran manai
But want to know , are there any words in அரன் , அறண்?
Meyyappan: I think this not word as such.. It looks like a name reference
Swami: சிவனை அரன் என்று சொல்லுவார்கள்..சரியா?
Indhira: Very informative.. thank you for sharing ..
Swami: கல்லாமை யை இல்லாமை ஆக்கவேண்டும் என்பதை தப்பாப்புரிஞ்சிட்டு ஆமையையே இல்லாம ஆக்கிடும் போல மனித இனம் 🙄
Shan: அரண்( பாதுகாப்பு, ) மனை( மாளிகை , வீடு) = அரண்மனை
Shan: திருச்சியில் மலைக்கோட்டைக்கு மேற்க்கிலும் கிழக்கிலும் முறையே மேல அரண் சாலையும்(west bullevard) and கீழ அரண் சாலை ( East bullevard) என்று உள்ளது..
Shan: ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள்
Shan: படையெடுத்துப்) போர்செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும்; (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.
Latha Kumar: நல்ல தகவல்கள்
Shan: நற்காலை.. 🙏 மிக சிறப்பு👏👏👏 பகிர்தலுக்கு நன்றி.. கேட்டவுடன் எமது எண்ணத்தில் தோன்றிய சில வரிகள்..
Shan:
“அன்றிலாய் காதல் அலர்ந்து
இன்று திக்கற்று நிக்கிறேன்
இல்லாள் நீ இல்லாமல்
நில் என் வலிக்கு வழி சொல்.. “
Swami: நீர் தமிழ் அள்ளித் தெளித்து வளித்ததில் அல்லி வந்தாளா?
கவிதை கிள்ளி வெள்ளி வள்ளியை கூப்பிட்டால் துள்ளி வருவாள்!
காதல் பள்ளிக்கு மல்லி சேதி அனுப்புங்கள் நல்லியோடு (பட்டு சேலை) வருவாள்!
Swami: இங்கே மல்லி என்ற வார்த்தையை இரண்டு மொழி பதத்தில் பயன்படுத்தி உள்ளேன். மல்லி (மல்லிகைப் பூ தமிழ் பதம்) மல்லி (மறுபடியும் தெலுங்கு பதம்)
Latha Kumar: வளித்ததில் ?
Swami: விளித்தல் என்ற சொல்லை கவிதை நடைக்காக வளித்தல் என்று சேர்த்துள்ளேன்
Swami: இந்தக்குழு நம்மில் உறங்கிக்கொண்டு இருக்கும் தமிழ்ஆர்வ பட்டாசை பற்றவைத்துவிடும் போல… 😁😁😁
Latha Kumar: விளி அழைத்தல் வளி காற்று மண்டலம். தமிழ் மிக நுட்பமான மொழி. ஒரு சொல் மாற்றி எழுதினால் அதன் பொருளும் மாறி வரும்.
Shan: “அல்லி வந்தாள் - வசந்த வல்லி வந்தாள் பூம்புனல் முங்கி ஆம்பலை அள்ளி வந்தாள் வெள்ளி முளைத்தும் தள்ளி நின்றாள் கள்ளி.. சொல்லி சென்றாள் மல்லியும் நல்லியும் தந்தால் நான் வருவேண் - மங்கல நாண் சூட…”
Latha Kumar: எதில் வருகிறது?
Swami: வளி என்றால் வான் வெளி ..வளி மண்டலம்..காற்று.என்ற பொருள் வரும். வளித்தல் என்ற சொல்லை நாங்கள் அழைத்தல் என்ற பொருளிலும் பயன்படுத்தி இருக்கிறோம்..
நோண்டி கூப்பிடுறதை அப்படி சொல்லுவோம்…
Latha Kumar: நோண்டி?
Shan: நான் இப்ப சுவாமியின் கவிதைக்கு சும்ம பதில் கவிதையாக சொல்ல முய்ற்சித்தத்து😂
Latha Kumar: புதிய சொற்கள் 😀👍
Swami: அருமை..அருமை..கவிதையிலே பதில் கூறிவிட்டார் சண்முகம். 👌🏻
Shan: நீங்க வார்த்தைகளை விதைத்திங்க நான் வளர்த்தேன் அம்புடுதேன்😀
Latha Kumar: ரொம்ப நல்லா இருக்கு.
Latha Kumar: மங்கலம் 😀👌
Swami: கலக்கமங்கலம் புகழ் புலவர், மங்கலமாய் SouthLyon மங்களத்திற்காக எழுதியது
Swami: சண்முகத்தின் சொந்த ஊர் கலக்கமங்கலம்.
Latha Kumar: ஆஹா. 👏
Swami: குறளில் இருந்து சில வார்த்தைகள்.
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு. குறள் 73
உயிருக்கும், உடலுக்கும் உள்ள தொடர்பு, உயிர் அன்பின்மீது கொண்ட ஆசையால் விளைந்தது எனக் கூறலாம்.
என்பு (எலும்பு) என்ற வார்த்தையை பல இடங்களில் நாம் பல இடங்களில் கவனித்து இருப்போம்…
என்பு தோல் போர்த்திய உடம்பு - எலும்பும் தோலும் தான் நம் உடம்பு (a simple definition of a human body)
என்பிலதனை வெயில் போலக் காயுமே - எலும்பு இல்லாத புழு போன்ற உயிரினங்களை வெயில் வாட்டுவது போல..(Science: bones act as thermal mass so it absorbs the heat from the sun, so lack of bone mass leads to quick thermal destruction - i have used this in my Thermodynamics Tamil book - not yet completed the mission)
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்…அன்புடையார் என்பும் பிறர்க்கு - எலும்பு மாற்று சிகிச்சைக்கு தான் இறந்த பிறகு எலும்பை கொடுத்து உதவும் அளவுக்கு அன்புடையவர்கள் (There was a bone transplantation in our culture)
I always see the science facts in திருக்குறள்.
Gopikrishnan Venkatesan: ஒரு வேலை என்பு என்ற சொல் தான் bone என்று மருவி இருக்குமோ. Enbu- bune- bone
Vinoth: Thermodynamics Tamil book? I love that idea 💡
Shan: சிறப்பு!!!
Shan: பொருத்தமான சிந்தனை!👌👌👌
Swami: Boss, lets do it….vaangaaa
Latha Kumar: தமிழில் என்னவென்று அழைக்கப்படும்
Swami: Thermodynamics - வெப்பஇயக்கவியல்
Vinoth: I did not study thermodynamics, it will be cool. I tried few more translations but failed.
Vinoth: எனது முதல் குறை கலைச்சொற்க்கள் இல்லாதது
Vinoth: Base reference? Book
Vinoth: சிறந்த கலைச்சொல் அகராதி உள்ளதா ? சிலம்பிற்க்காக ஒன்றை தொகுப்போமா ?
Shan: கலை சொற்க்களை நாம் அதிகமாக உபயோக படுத்த்தினால் மட்டுமே அதிகமாக உருவாக்க முடியும்..
Shan: நீரை அள்ள அள்ள நீர் சுரக்கும்..
Swami: i dont know…may be there.
Shan: செய்யலாம்..
Vinoth: ஒரு இணைய பக்கத்தினை உருவாக்க முடியும். முதலாவதாக எந்த துரையில் துவங்கலாம்?