திமில்
திமில்
Shan: “நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை”என்பார். மீன் வேட்டத்துக்குச் சென்ற பரதவர், நிரை நிரையாகக் கட்டு மரங்களைக் கரை கொண்டு சேர்க்கும்போது ஏற்படும் ஆரவாரம் என்பது பொருள். - மதுரைக் காஞ்சி - பத்துப்பாடு- மாங்குடி மருதனார்..
Shan: திமில் என்ற சொல் சங்க இலக்கியங்களில் நிறைய இடங்களில் கையாளப்பட்டுள்ளது..
Shan: இதை வைத்து தானோ என்னவோ திமிங்கிலம் என்ற மீனுக்கு பெயர் காரணம் வந்துருக்குமோ..!?
Vinoth: i had the same feeling
Shan: இதில் இன்னொரு சொல் ஆராய்வுக்கு உட்பட்டது..
Shan: “கம்பலை”… கண்ணீரும் கம்பலையுமாக வந்தார்கள் என்று சொல்லுவம்ல..இதில் கம்பலை.. என்ற சொல்லுக்கு என்ன பொருள்னு ஆராயலாம்
Vinoth: கண்ணீரும் கம்பலையும் நான் சொல்ல கேள்வி பட்டு இருக்கேன்
Shan: கண்ணீர் தெரியும் .. அப்ப கம்பலை..
Vinoth: ஆனால் சிந்தித்தது இல்லை. இது எங்கள் ஊரில் பொதுவாக பயன்படும் வாக்கியம்
Shan: இதுவுமே சங்க இலக்கியத்தில் சொல்லப் பட்ட சொல் தான்.
Shan: நாளடைவில் பேச்சு வழக்கில் தான் இருக்கு ஆனால் பொருள் அறியாமல் விட்டுட்டோம்.
Shan: https://nanjilnadan.com/2018/04/21/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88/
Vinoth: எங்க பாட்டி நான் சின்ன வயசுல இருக்கும் போது பல தடவ சொல்ல கேட்டு இருக்கேன்
Swami: THIMIL + KALAM ???
Vinoth: i think other way, because of திமிங்கிலம் கப்பலுக்கும் இப்படி ஒரு பெயர் வந்து இருக்கலாம்
Swami: KALAM - KAPPALUKKU (MITHAKKUM PORUL) KALAM YENDRU ORU PEYAR UNDU
Swami: THIMIL YENBATHU UYARNDU NIRKUM YENDRA PORULIL VARUM
Swami: THIMIR - UYARNTHU NIRPATHU
Shan: ..மிக சரியானா பொருத்தம்.. முனைவரின் முயற்சி அருமை
Indhira: Detailed explanation… nice to know
Shan: கலம்.. மரக்கலம்.. கலம் + கரை + விளக்கம் - கலங்கரைவிளக்கம்
Shan: இது விளக்ககம் என்றால் கூட பொருந்தும் என்பது என் எண்ணம்..
Swami: கம்பலை.
கடல் அலையில் ஆணலை பெண்ணலை என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
கம்பலை என்ற சொல் அலை வகையில் ஒன்று போல..
விசாரிப்போம்…